கடிதங்கள்

வணக்கம்.. நலமா.. 14-ஆம் தேதி காலை நாகர்கோவில் வந்திருந்தேன்.. டாக்டர் தானப்பன் பெண் திருமணத்தில் கச்சேரி… அழகான இடங்கள்.. தெற்கு முழுவதுமே இப்படித்தான் கேரளாவின் மிச்சங்கள் போலத் தோன்றியது.. உங்களை, நிறைய நினைத்துக்கொண்டேன்…

கன்யாகுமரி, மனக்குடியின் உடைந்த பாலம், சுசீந்த்ரம், தொட்டிப்பாலம், திற்பரப்பு அருவி எல்லாம் பார்த்துவிட்டு 15-ஆம் தேதி மாலை அனந்தபுரியில் ஏறினோம்..

இரயில் நிலையத்தில், சு.ரா., நாஞ்சில் நாடன் நினைவு வந்தது…

ஈரோடு நாகராஜன்.


wishes,

Erode Nagaraj.

1. http://ramsabode.wordpress.com/2006/10/07/erode-nagaraj/

அன்புள்ள நாகராஜ்

நீங்கள் வந்த போது நல்ல பருவநிலை. இது நாகர்கோயிலுக்கு உண்மையில் மழைககாலம். ஆனால் மழையை சென்ற காற்றழுத்தம் இழுத்து வங்கத்துக்குக் கொன்டுசென்றுவிட்டது
ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

கீழ்க்கண்ட இணைப்பை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். இந்து மரபை பல்வேறு ஞானவழிகளின் ஊடுபாவாக உருவகிக்க முயல்கிறென்

 
http://www.tamilhindu.com/2009/06/thomas-berry-eco-spiritualist/

அரவிந்தன் நீலகண்டன்

அன்புள்ள அரவிந்தன்

நல்ல கட்டுரை. இத்தகைய மனிதர்களைப்பற்றி இங்கே எவருமே பேசுவதில்லை. நாம் பேசுவதெல்லாம் நம்மை சிறுமைப்படுத்துபவர்களைப்பற்றி மட்டுமே.

ஜெ

 

ஜெயமோகன் ,

நலமா?

நான் புதிதாக ப்லோக் எழுதத் தொடங்கியுள்ளேன். அதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அதனைத் வாசித்து தங்கள் அறிவரைகளையும், எதிர்வினைகளையும் வழங்க வேண்டும் என்று தங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளகிறேன்

என் ‘ப்லோக்’ கிற்கான முகவரி ‘http://suzhiyam0.blogspot.com‘  

மற்றவகையில், தங்கள் வலைத்தளத்தை தொடர்ந்து வாசித்து வருகிறேன். காந்தியை பற்றிய தங்கள் கட்டுரைகள் காந்தியை பற்றியும் , காந்தியம் பற்றியும் மேலும் ஆழமாகத் தெரிந்து கொள்ள துண்டுகிறது. விஷ்ணுபுரம் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். மெதுவாக ஆழ்ந்து படிக்க விழைகிறேன்.

தங்களின் கீதை பகுதிகளையும் படிக்க தொடங்கியுள்ளேன். கீதையை வெறும் பக்தி நூலாகவே படித்தறிந்து இருந்த எனக்கு, தங்களின் கீதை பற்றிய பகுதிகள் முற்றிலும் வேறு தளத்தில் கீதையை அணுக அறிமுகப் படுத்தியுள்ளது. அந்த அனுபவங்களைக் குறித்து எழுதத் தொடங்கினால் பெரிய கட்டுரையே எழுத வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது அவற்றைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டு நான் புரிந்து கொண்டமை சரியா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நன்றி,
சுந்தரவடிவேலன்.

 

சார்
வணக்கம்.அன்புகூர்ந்து பார்க்கவும்.
அன்புடன்
ராஜா சந்திரசேகர்
 
 
 
 
முந்தைய கட்டுரைதமிழினி கட்டுரை
அடுத்த கட்டுரைஒலியும் இசையும்