நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்

sir,
i have read about ur blog about stell bruce.
u have told that modern medicine also a reason for his sad end!
it highly not wanted, illogical and condemnanble!
every one knows renal failure has no cure and only can treated by
dialysis just for prolonging life and to relieve symptoms of renal
failure!!
it is upto the patients and their relatives to think n decide about
the treatment options!
the renal failure is due to fate or chances or complications of
basic disease not not due to modern medicine!
modern medicine tries to cure if possible..but science has not
progressed that much to cure all disease.we only can control the
disease manifestations if not cure..nothing comes free ..health care
also needs money!
if they are not affordable they have to approach other means!
it is higly condemnable to write like this without any responsibility
and accountability by a famous writer like a layman!!

Dr.V.Magesh
M.D Internal Medicine
MMC GGH
Chennai 600003

மதிப்பிற்குரிய டாக்டர் மகேஷ் அவர்களுக்கு

உங்கள் கடிதம் கண்டேன். இது மிகச் சம்பிராதயமாக டாக்டர்கள் சொல்லும் பதில்.கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக டாக்டர்களால் நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட பலரைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். டாக்டர்கள் ஒருபோதும் நோயின் உண்மை நிலையைச் சொல்வதில்லை. உறவினர்களிடம் ஒரு பொய்யான நம்பிக்கையையே அளிக்கிறார்கள்.எந்த உறவினரும்’ ஒரு வாய்ப்பு உள்ளது’ என்று டாக்டர் சொன்னபின் பணத்தைப்பற்றி யோசிக்க மாட்டார். அது உணர்ச்சிபூர்வமாக சாத்தியமல்ல. நோயாளியின் பொருளாதாரநிலையை உணர்ந்து நடைமுறை சார்ந்த உண்மையைச் சொல்லவேண்டியது மருத்துவரின் கடமை, அதிலிருந்து தார்மீகமாக தப்பிக்க முடியாது என்றே நினைக்கிறேன். தர்க்கபூர்வமாக மட்டுமே பதில் சொல்லலாம்.– இப்போது நீங்கள் சொல்லியிருப்பதுபோல.

குறிப்பாக இரு விஷயங்களை ஒவ்வொருநாளும் தொழிற்சங்கவாதியாகக் கண்டுகொன்டே இருக்கிறேன். கடைநிலை ஊழியர்கள் அவர்களின் ஊதியத்தில் பெரும்பகுதியை வயோதிகத் தாய்தந்தையின் சிகிழ்ச்சைக்காக செலவிட்டுவிடுகிறார்கள்- மருத்துவக்காப்புகளுக்கு மேலே டாக்டர்கள் சொல்லி ஆசைகாட்டி செய்யவைக்கும் செலவைச் சொல்கிறேன். பலசமயம் ஒரு வயோதிகரை ஆறுமாதம் அதிகமாக படுக்கையில் கிடத்திவைத்திருப்பதற்கு அந்த லட்சங்கள் செலவிடப்படுகின்றன. ஓர் ஊழியர் வாழ்நாள் முழுக்க சேமிக்கும் தொகை அறுபது வயதுக்குமே மருத்துவருக்குப் போய்விடுகிறது. பிராவிடன்ட் ஃபண்டில் ஆயிரங்களைச் சேமிக்கும் ஊழியர்களிடம் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு– அது டாக்டருக்கான கப்பம் என்று. இதுவே நடைமுறை உண்மை.

பதினைந்து வருடம் முன்பு நான் இவான் இல்லிச் நவீன மருத்துவம் பற்றி எழுதிய Ivan Illich. Medical Nemesis நூலைப் படித்தபோது அது சற்று மிகையான நூல் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் இப்போது பல்வேறு அனுபவங்கள் மூலம் மருத்துவம் உருவாக்கும் நோயே நம் சமூகத்தின் மிக ஆபத்தான நோய் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. இதோ இப்போதுகூட மருத்துவத்தின் வலையில் சிக்கி அழிந்துகொண்டிருக்கும் இரு நண்பர்களைப்பற்றி நண்பர்களிடம் வருந்தி பேசி முடித்தபின் உங்கள் கடிதத்தைப் பார்க்கிறேன்.யாரையும் புண்படுத்தவில்லை. ஆனால் இந்த ஆழமான அவநம்பிக்கை அனுபவங்கள் வழியாக என்னிடம் உருவாகிஇருக்கிறது என்றுமட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் இவான் இல்லிச்சுக்கு மட்டுமல்ல பாமரமனிதனுக்கும் சொல்வதற்கு ஒரு தரப்பு இருக்கிறது
மன்னிக்கவும்

நவீன மருத்துவம்- இன்னொரு கடிதம்

நவீனமருத்துவம்-ஸ்டெல்லாபுரூஸ்-ஒருகடிதம்

ஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்

முந்தைய கட்டுரைஸ்டெல்லாபுரூஸ் என்ற காளிதாஸ்
அடுத்த கட்டுரைநம்மாழ்வார்-ஒரு கடிதம்