அன்புள்ள ஜெயமோகன், அடுத்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 26) அன்று சென்னையில் “நகர்ப்புற தோட்டக்கலை” பற்றிய ஒரு முழு நாள் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறோம். அழைப்பை சென்னையில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளவும். நகர்ப்புறங்களில் காலி இடங்களில் ‘சமூகத் தோட்டங்கள்” அமைத்து கீரை மற்றும் மூலிகைகளைப் பரவலாக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். இப்போது ஆங்கிலத்தில் நடத்தினாலும், கூடிய சீக்கிரம் தமிழில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இங்கிலாந்தில் Incredible Edibleஎன்கிற நிறுவனம் செய்துகாண்பித்திருப்பதைப் பாருங்கள். எங்கு, யார், எப்போது வேண்டுமானாலும் காய்கனிகளை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். இதுவே எங்களின் கனவும் கூட! http://www.ted.com/talks/pam_warhurst_how_we_can_eat_our_landscapes.html http://www.metro.co.uk/news/newsfocus/901280-incredible-edible-launches-scheme-to-grow-and-pick-food-அன்ய்வ்ஹேரே நன்றி, சங்கீதா ஸ்ரீராம் [email protected]