கடி

எங்கும் இருக்கும்
என்ற அச்சமே அது

வளைவல்ல
நெளிவின் விரைவல்ல
பறக்கும் நாக்கோ
விழித்த கண்களோ
விஷமோ அல்ல

பாதாளத்தின் சாட்டை சொடுக்கல்
என்றன புராணங்கள்.
பின்பு பரம்பொருளுக்குக் கீழே
மடிந்த காலம் என்றன
பரமன் கழுத்தின் படம் என்றன.

நெளியும் தீ
காமத்தில் புடைத்தெழுந்த வினாக்குறி
புற்றுக்குள் சுருண்ட
ஒற்றைச்சொல்
தன் வாலைத் தான் விழுங்கும்
முடிவிலி

இடிபாடுகளின் மௌனத்தை
ஏந்திய சிலைகளின் கண்களும்
அவற்றைப்போல விழிக்கின்ன்றன.
அனந்தகால நாகம்
கடிக்குமோ பெருவெளியை?

முந்தைய கட்டுரைஒரு விலங்குச்சிற்பம்-கடிதம்
அடுத்த கட்டுரைநான்கு வேடங்கள்-கடிதங்கள்