மோதி,கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,
 
திரு. மோதி பற்றிய செய்தி சுகா மூலமக வந்தது. உங்கள் பக்கத்தில் அஞ்சலியைப் பார்த்துதான் சுகாவும் தெரிந்துகொண்டிருக்கிறார். உங்கள் செய்தியில் சில திருத்தங்கள். திரு மோதி வட இந்த்திய குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. ஆந்திராவைச் சேர்ந்த ஆனால் தமிழ் நாட்டில் பல ஆண்டுகளாக இருக்கும் ‘கோமுட்டி செட்டியார்’ இனத்தைச் சேர்ந்தவர்.
 
எனக்கு அவரை 1999லிருந்து தெரியும். 2001க்குப் பிறகு கோவை வந்து எனக்கு நாஞ்சிலின் நட்பு கிடைத்ததும் அவர்கள் இருவருக்கும் இடையில் தொடர்பும், நட்பும் ஏற்பட்டன. இது பற்றி ‘வார்த்தை’ இதழில் நான் எழுதி இருக்கிறேன். ஜே.கே.வுக்கு பிறகு மோதி மதித்த எழுத்தாள நண்பர் நாஞ்சில். உங்கள் எழுத்துகளையும் அவர் பெரிதும் ரசித்து வந்தார். நாஞ்சிலை அவருக்கு கடந்த 7,8 வருடங்களாகத் தெரியும். 
 

மோதிக்கு  70 வயது நிறைவடைய இன்னமும் இரு தினங்கள் உள்ளன.
 
வ.ஸ்ரீ.


இந்தத் தகவல் பிழைகளை உங்கள் பக்கத்தில் முடிந்தால் திருத்திக் கொள்ளவும்.
 
அன்புடன்
 
வ.ஸ்ரீநிவாசன்.
முந்தைய கட்டுரைசிங்கப்பூர் இலக்கிய நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைபுண்ணியபூமி,மேலும் கடிதங்கள்