வணக்கம் தமிழகம்

ஷங்கர் ராம சுப்ரமணியன் தமிழில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வேகத்துடன் எழுதவந்த கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். ஓர் இளம் கவிஞருக்குரிய பெருகி நிறையும் உத்வேகம் அவரிடம் மெல்லமெல்ல இல்லாமலானது என்பது என் மதிப்பீடு. அதற்கு தமிழ்ச்சூழலைத்தான் காரணம் காட்டவேண்டும். கவிஞர்கள் இங்கே பாலைவனத்தில் இரைதேடும் மிருகங்கள் போல வாழவேண்டியிருக்கிறது. ஆனாலும் தமிழின் நல்ல கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கிறார்

ஷங்கர் ராம சுப்ரமணியன்

அவரது இணையதளத்தில் இந்தக் கவிதையை வாசித்து சிரித்தேன். நேரடியான பகடி. ஒரு அன்றாட உண்மை சுவாரசியமாக கோணலாக்கப்படுவதே பகடியின் மிகச்சிறந்த வடிவம் என்பார்கள். இந்தக்கவிதை மட்டுமல்ல, கூட உள்ள புகைப்படமும் வேடிக்கையானது.


வணக்கம் தமிழகம், ஷங்கர் ராமசுப்ரமணியன் கவிதை

முந்தைய கட்டுரைமனசாட்சிச்சந்தை
அடுத்த கட்டுரைதகவலறியும் உரிமை சட்டம்- ஓர் எதிர்வினை