அன்புள்ள ஜெ,
இந்தச்சுட்டியை பார்த்தீர்களா? ஒரு சின்னப்பெண் அவளே தகவலறியும் உரிமைச்சட்டப்படி காந்தியை இந்தியாவின் தேசத்தந்தை என்று சொன்னது யார் என்று கேட்டு பெற்றிருக்கிறாள்.
ஆனந்த் சுந்தரம்
அன்புள்ள சுந்தரம்,
இந்தச் செய்தி வருத்தமளிக்கிறது. இந்தக் குழந்தை செய்தது அதிகப்பிரசங்கித்தனம். கண்டிப்பாக குழந்தைகள் இதையெல்லாம் செய்யாது. இது அந்தப் பெற்றோரின் விளம்பரவெறி. செய்தியாளர்கள் வரை அதைக் கொண்டு சென்றதும் அவர்களாகவே இருக்கும்.
தகவலறியும் உரிமைச்சட்டம் அரசால் மக்களிடையே இருந்து மறைக்கப்படும் தகவல்களைக் கொண்டுவந்து மக்கள் மத்தியில் வைப்பதற்கான சட்டம். நிர்வாகம் வெளிப்படையாக நிகழ்வதற்கு மக்கள் கண்காணிப்பை உருவாக்கும் சட்டம்.
பள்ளிப்பாடம் எழுதுவதற்கு அதைப்பயன்படுத்துவது அந்த நோக்கத்தையே எள்ளி நகையாடுவது. அதற்கு விளம்பரமளித்து செய்தியாக்கிய முட்டாளை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.
ஜெ