கோயில்பட்டியைச்சேர்ந்த புனைவிலக்கியவாதிகளில் குறிப்பிடத்தக்கவர் உதயஷங்கர். தேவதச்சனின் ‘சபை’யில் நான் அவரைச் சந்தித்திருக்கிறேன். பின்னர் திருவண்ணாமலையில்
உதயஷங்கர் எட்டு சிறுகதைத் தொகுதிகள், ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கப் பொறுப்பில் இருக்கிறார். அவரது பல கதைகள் என்னை மிகவும் கவர்ந்திருக்கின்றன.
அவரது இணையதளத்தில் கு.அழகிரிசாமியைப்பற்றிய இந்தப் பதிவு என்னைக் கவர்ந்தது. அழகிரிசாமி மீது கரிசல் எழுத்தாளர்களுக்கு இருக்கும் மயக்கத்தைப்பற்றிப்பேசும் பதிவில் அவர்களுக்கே உரிய மிகையுணர்ச்சியும் கலந்திருக்கிறது.