நித்தியும் நானும்

ஞானிகளை நாம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டுமே அன்றி நம்மை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனம் என்று ஜெயமோகன் நீண்ட காலமாக ஓதுகிறார். பார்ப்பனியத் திமிரின் இலக்கிய சாட்சியாக அவர் நீடித்திருப்பதன் தத்துவம் இதுதான்.

பொதுவாக என்னைப்பற்றிய வசைகளை நான் புறக்கணிப்பதே வழக்கம். ஆனால் இந்த இணைப்பை எனக்கு அனுப்பிய நண்பர் இந்தக் கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று தனக்குப்புரியவில்லை என்றும் நான் விளக்கமுடியுமா என்றும் கேட்டிருந்தார். உண்மையில் எனக்கும் புரியவில்லை.

நான் நித்யானந்தாவை ஆதரிக்கவேண்டும் என்கிறார்களா? இல்லை காஞ்சி சின்ன சங்கராச்சாரியாரை ஆதரிக்கவேண்டும் என்கிறார்களா? இல்லை பெரிய சங்கராச்சாரியாரையும் இதே வரிசையில் சேர்த்தால் இவர்களுக்கு சௌகரியமாக இருக்குமா?

முந்தைய கட்டுரைநாராயணகுருகுலமும் ’வசவு’ இணையதளமும்
அடுத்த கட்டுரைவேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப்பிரமையா?