ஜெ.மோ.,
சுமார் 20 வருடங்கள் முன்பு நான் துவக்கப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது ‘கல்கண்டு’ பத்திரிக்கையில் லேனா.தமிழ்வாணன் ஆஸ்திரேலிய- நியூஸிலாந்து பயணக் கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தார். அப்போது மிக ஆவலாக படித்த பகுதி அது. கடையிலிருந்து வாங்கிக் கொண்டு நடந்து வீட்டுக்கு வரும்போதே படித்து முடித்துவிடுவேன். இப்போது அதே நிலப்பகுதியை பற்றி முற்றிலும் மாறுபட்ட ஒரு எழுத்தாளரின் விழி வழியே பார்க்கப் போகிறேன் என்கிறபோது இந்த அனுபவம் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆவல் எழுகிறது.
சாய் மகேஷ்
அன்புள்ள ஜெ
புல்வெளிதேசம் காணவில்லையே ஏன்? எழுதுவீர்களா ?
செல்வா
அன்புள்ள செல்வா
..நடுவெ சில மனச்சோர்வுகள்.ஈழம் காரணமாக. மீன்டும் எழுதுவேன்
ஜெ
டியர் ஜெ,
தங்கள் புல்வெளி தேசம் கட்டுரை எதிர்பார்த்ததைப் போல மிக நன்றாக வந்திருக்கிறது. நன்றி.
ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழர்கள் ( புலம்பெயர்ந்த ) என்ன வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கை நிலை அங்கு சிறப்பாக இருக்கிறதா?
நன்றி குணசேகரன் அ
மதுரை
அன்புள்ள குணசேகர்
நான் பார்த்தவரைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மிகமிகச்சிறப்பான நிலையில்தான் இருக்கிறார்கள். நாம் இருக்கும் நிலைமையுடன் ஒப்பிடும்போது மிகச்சிறப்பாக.
ஜெ
அன்புள்ள ஜெ
புல்வெளி தேசம் உங்கள் கோணத்தில் ஒரு புதியவாழ்க்கையை காட்டுவதாக இருந்தது. அரிய தகவல்கள். சட் சஎன்று மாறி மாறிச்செல்லும் கோணம். பயணக்கட்டுரைகள் ஒரு முக்கியமான இலக்கிய வகை. அதிலே அதிகமானபேர் எழுதியதில்லை. எழுதியவர்களும் செறிவாக எழுதாமல் ஜாலியாக எழுதுவதாக எண்ணி அசட்டு ஜோக்குகளும் வளவளப்புகளுமாக எழுதி வைத்திருக்கிறார்கள். உங்கல் கட்டுரைத்தொடர் அதற்கு ஒரு நல்ல விதிவிலக்காக அருமையானதாக இருந்தது
சுப்ரமணியம் செல்வம்