கவிதை–ஒரு கடிதம்

எதுவும் சொல்வதற்கு இல்லை.. மனுஷ்ய புத்திரன் கவிதைக்கும் உங்கள் கவிதைக்கும் இடையே ஒரு பைத்தியக்கார விடுதி உண்டு. அங்கு, உள்ளே இருக்கும் ஒரு பைத்தியமும் வாசற்படியில் நிற்கும் இன்னொரு பைத்தியமும் மாறி மாறி சிரித்து அழுது ஊஊளளையிட்டுக் கொண்டு…..

now that the guns are silenced,
we can go back to our poems.
and peans and panegyrics.

and wait for it to happen again.
somewhere
someplace

but
hopefully,
this time
neither as tragedy.
nor as farce.

தங்கள் சமநிலை அச்சமூட்டுகிறது. ஒருவகையில் அது ஒரு மாபெரும் அடையாள இழப்பு. உள்ளுக்குள் அலைகள் முடியாது அடித்துக் கொண்டு இருக்கும் போதும் எப்படி முடிகிறது தங்களால்?

மனுஷ்ய புத்திரன் தான் எனக்கு மிகவும் நெருக்கமான கவிஞர். ஆனால் மனுஷ்ய புத்திரன் கவிதையில் உள்ள ‘வரலாற்றில்’ இருந்து உங்கள் கவிதையில் உள்ள ‘வரலாறுக்கு’  வர எனக்கு எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. இந்த ‘வரலாறை’ புரிந்து கொள்ள..  மானசீகமாக, கசப்பில்லாமல் புரிந்து கொள்ள எத்தனை அலைச்சலை, அவமானங்களை, துவேஷங்களை சந்தித்திருபீர்கள் என்று நினைக்கும் பொழுது மனம் கலங்குகிறது. ஒருவகையில் இந்தக் கசப்பின்மைக்காகவே இவையெல்லாம் பொருட்படுத்தத்தக்க துயரங்கள் தான் என்றும் தோன்றுகிறது. கடைசி காலத்தில் ஒருவனை வந்தடையும் கசப்பு அசாதாரமாணது. பெரும் ஸ்காலர்கள் பலர் இக்கசப்பினுள் புழுங்கிக் கொண்டிருப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். புழுக்கத்தைத தாங்க ஒரு அடையாளம். ‘வரலாறு என்னும் பைத்தியக்கார விடுதி’ என்று எழுதிய கவிஞனைப் போல். அவன் அடைந்த துயரம் பிரம்மாண்டமானது. அத்துயரம் தந்த ஆழ்ந்த பதற்றம்.. அதன் மூலம் சமநிலைக் குலைவு.. அதிலிருந்து எழுந்த ஒரு கவிதை.. அது எவ்வளவு மகத்துவமானதாக இருந்தாலும், வாசகனை ஒரு சமநிலையற்ற அடையாளக் குப்பியை நோக்கிச் செலுத்துவதாகவே இப்பொழுது தோன்றுகிறது.

உங்கள் கவிமனதின் சமநிலையே உங்களைத் தாங்கி ரட்சித்து வருகிறது. அது தரும் கனிவே (உங்களுக்கும், மற்றவர்களுக்கும்) தங்களின் ஆகப்பெரிய சாதனை.

அருணாசலத்திற்கு ஆவுடைலிங்கம் எப்படி ஒரு தொடக்கமோ.. கிரிதரனுக்கு அவனுடைய பொட்டிக்கடையும், கல்லாவில் சேரும் சில்லரைப் பணமும் எப்படி ஒரு் மீட்புணர்வோ… அதே போல் தான் எனக்கு தங்களின் எழுத்து. நிர்குணப் பிரம்மம் நம் அறிவைச் சென்று அடைகிறது. சகுணப் பிரம்மமே நெஞ்சில் அழகனுபவமாக விரிகிறது என்று ஒருமுறை எழுதி இருந்தீர்கள். எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் அவை. இங்கு விரல் சொடுகில் எல்லாம் உள்ளது. லட்சக்கணக்கான புத்தகங்கள், இசைத்தகடுகள், உலக சினிமாக்கள், மற்றும் பல வசதிகள். ஆனாலும் இவையனைத்தும் ஒரு மேலான கவிமனம் தரும் உவப்புக்கும், தரிசனத்துக்கும் ஈடாகாது.

மனமார்ந்த நன்றி.

அன்புடன்,
அரவிந்த்

முந்தைய கட்டுரைபழசி ராஜா
அடுத்த கட்டுரைகாந்தியும் அம்பேத்காரும்