ஆஸி கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

அமுல் மற்றும் மொரார்ஜி பற்றி ஒரு சிறிய செய்தி.

1946 ஜனவரி 4 ஆம் தேதி குஜராத்தில் கைரா மாவட்டத்தில் சமார்க்கா என்னும் இடத்தில் நடந்த விவசாயிகளின் கூட்டங்களை நடத்தினார் மொரார்ஜி தேசாய். சர்தார் பட்டேலின் ஆலோசனைப்படி அது நடந்தது. தீவிரமான பால் உற்பத்தி, சீரான பால்சேகரிப்பு, தரகர்களை முழுக்கவே தவிர்ப்பது ஆகியவை கொள்கைகளாக இருந்தன. தேசிய அளவில் வணிகம் செய்யவும் திட்டமிட்டார்கள்.

URL Link:http://www.indiavisitinformation.com/indian-personality/verghese-kurian.shtml

பாலகிருஷ்ணன்
அன்புள்ள ஜெ.மோ.

வணக்கம்.  ஆன்ஸாக் தினத்தையும்  உலகப்போரையும் பற்றி எழுதும் ஆஸிப் பயணப்பதிவுகளை  வாசித்தேன். அருமையான விவரங்களும் விளக்கங்களும் அடங்கிய பதிவுக்கு நன்றி.  அங்கே எல்லா நகரங்களிலும் ‘போர் நினைவுச்சின்னம்’ ஒன்றை வைத்து  மரியாதை செய்கிறார்கள். இங்கே நியூஸியிலும் அந்த நாள் அதிகாலை மிகவும் உணர்ச்சிகரமானதாகவே இருக்கின்றது. சிறிய கிராமங்களில் கூட அந்த ஊரில் இருந்து போரில் கலந்துகொண்டவர்களின் விவரங்கள்  கல்லில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. வார் மெமோரியல் என்பது ஒரு முக்கியமான நினைவுச் சின்னம்.

நியூஸியில் 22 வருடங்களாக வாழ்ந்து வருகின்ற என் பார்வையில் சில இடுகைகளை  கடந்த சில வருடங்களில் எழுதிய சுட்டி இவை.  ( ரொம்பவே சின்ன இடுகைதான்)

நேரம் கிடைக்கும்போது  பார்த்துவையுங்கள். எங்கள் தமிழ்ச்சங்கத்தின் வருட வெளியீடான ‘தமிழருவி’யிலும்  இது வெளியிடப்பட்டுள்ளது.(உள்ளூர் பதிவரை ஆதரிக்கலைன்னா எப்படி? :-))))

http://thulasidhalam.blogspot.com/2007/04/blog-post_25.html

http://thulasidhalam.blogspot.com/2008/04/blog-post_25.html

 
என்றும் அன்புடன்,
துளசி

 

அன்புள்ள ஜெ

புல்வெளிதேசம் வாசித்தேன்.

போரா குகைகளைப்பற்றிய இந்த இணைப்பு உங்களுக்கு ஆர்வமூட்டலாம்
வினாயகம் குழந்தைவேல்

http://en.wikipedia.org/wiki/Borra_Caves

 

அன்புள்ள ஜெ

சென்றவருடம் நானும் நண்பர்களும் ஆந்திராவில் போரா குகைகளுக்கு போனோம். இன்னும் ஏன் இந்த அற்புதமான இடத்தை சினிமாக்காரர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது. அதைவிட முட்க்கியமாக ஏன் இன்னும் ஜெமோ இதைப்பற்றி எழுதவில்லை என்று சொல்லிக்கொன்டோம். அதைப்போலவே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அற்புதமான சுற்றுலா இடம் இது. நன்றி

சண்முகம்
அன்புள்ள ஜெ

உங்கள் ஆஸி பயணக்கட்டுரைகளை வாசித்துக்கொன்டிருக்கிறேன். நீங்கள் அங்கே அரசியலே பேசவில்லையா என்ன? நீங்கள் அங்கே இருந்தபோதுதான் மெல்பர்ன் நகரில் ஈழ ஆதரவுப்போராட்டங்கள் நடந்தன/

சிவலிங்கம்

அன்புள்ள சிவா

நான் மத்திய அரசு ஊழியன். அனுமதி பெற்று ஆஸி சென்றவன்

ஜெ

முந்தைய கட்டுரைஇ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்
அடுத்த கட்டுரைஇ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2