புயலிலே ஒரு தோணி – நவீன் விமர்சனம்

ஜெ,

வணக்கம் நலம்தானே? புயலிலே ஒரு தோணி குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். உங்கள் பார்வைக்கு:

அன்புடன்,
நவீன்

அன்புள்ள நவீன்,

அழகான கட்டுரை. நுட்பமாக வாசித்திருக்கிறீர்கள். நீங்கள் இதுவரை எழுதிய இலக்கியக்கட்டுரைகளில் இதுவே சிறந்தது. குறிப்பாக முடிவு வரி. உண்மையில் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரிசனம் உடைய எவர் வரலாற்றை முன்வைத்து எழுதினாலும் இந்த மனநிலையே எஞ்சுகிறது.

சோர்வூட்டுவதாக இளமையில் தோன்றும் இந்தத் தரிசனம் வாழ்க்கை முதிரும்தோறும், பாதி தாண்டும்போது குறிப்பாக, பிரகாசமானதாகவும் ஒளியூட்டுவதாகவும் ஆகிறது. குச்சி ஐஸ்கிரீமை சுவைக்கும் குழந்தை கொஞ்சம் கொஞ்சமாக ‘இம்புட்டுத்தானா?’ என அடையும் ஏமாற்றம் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒன்று. ‘இல்லமக்கா சாமிக்கே கூட அம்புட்டேதான்’ என்று அம்மா சொல்லும்போது குழந்தைக்கு ஒரு மனநிறைவு வருகிறதே, அதுதான் இது.

ஜெ

முந்தைய கட்டுரைகம்பராமாயணம் அரங்கம் – ஊட்டி – மே 25,26,27-2012
அடுத்த கட்டுரைகதைகள் – கடிதங்கள்