எங்கள் சமண இந்தியப் பயணத்தில் லோத்தல், டோலவீரா நகரங்களுக்கும் சென்றிருந்தோம். அந்த விவரணையில் எப்படி சரஸ்வதி கரையில் உருவான ஒரு பெரிய நாகரீகம் காலப்போக்கில் அழிந்தது என்பதை விவரித்திருந்தேன். ஆரிய -திராவிடவாதம் என்பது மொகஞ்சதாரோ ஹரப்பா என்னும் இரு நகரங்கள் மட்டுமே அகழ்வாய்வில் கிடைத்தபோது அதற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட ஒரு ஊகம் மட்டுமே. இன்று நூற்றுக்கணக்கான அதேகாலகட்டத்து , அதே நாகரீகம் கொண்ட நகரங்கள் அகழ்வுசெய்யப்பட்டுவிட்ட நிலையில் ஆரியர்படையெடுப்பு என்ற வாதம், ஆரிய திராவிட இனப்பிரிவினைக்கோட்பாடு அர்த்தமற்றதாக ஐயம் திரிபற நிரூபணமாகிவிட்டது என கூறியிருந்தேன்.
அந்த விஷயத்தை விரிவாக ஆராயும் ஒரு நூல் மிஷல் தனினோ எழுதிய மறைந்த நதி . பி.ஆர் மகாதேவன் அந்நூல் பற்றி எழுதியிருக்கிறார்
சிந்து சமவெளி மக்கள் தொடர்பாக அகழ்வாராய்ச்சி சான்றுகள் கிடைத்திருக்கின்றன. வேத கால கங்கைச் சமவெளி நாகரிகம் பற்றிய எழுத்து வடிவ சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்றின் உடல் கிடைத்திருக்கிறது. இன்னொன்றின் தலை கிடைத்திருக்கிறது. அது ஒரே நபரின் உருவமே என்பதை ஒருவர் ஏற்றுக் கொள்ள மிகவும் அடிப்படையாகத் தேவைப்படும் ஒரு விஷயம் எளிய பகுத்தறிவு மட்டும்தான். நீங்கள் பகுத்தறிவு உள்ளவரா… அல்லாதவரா..? மிஷல் தனினோ மிக எளிதாக ஒரு கேள்வியை அமைதியாக முன்வைத்திருக்கிறார்.
அருகர்களின் பாதை 18 – டோலாவீரா
அருகர்களின் பாதை 15 – அகமதாபாத்,லோதல்
சிந்துசமவெளி எழுத்துக்கள்