தமிழில் வாசிப்பதற்கு…

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம், நலம் அறிய அவா. (இப்படி எழுதுகையில் எனது பள்ளி நாட்கள் நினைவிற்கு வந்து என்னைக் குதூகலப்படுத்தும்.)

குற்றமும் தண்டனையும்
அசடன்
கரமசோவ் சகோதரர்கள்
போரும் அமைதியும்

இவைகளை வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழில் இவைகளை வாசித்தால் ரஷ்ய எழுத்தாளர்கள் தாங்கள் ஒவ்வொரு வரியிலும் சொல்ல வந்த அசல் கருத்துக்களும், உணர்ச்சிகளும் மற்றும் பல விஷயங்களும் கிட்டுமா என்பதை எனக்குத் தெரியப்படுத்தவும். நீங்கள் கண்டிப்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் இரண்டிலும் வாசித்திருப்பீர்கள்.

நான் வண்ணதாசன் மற்றும் ஜெயமோகனின் வாசகன். உங்களுக்கே தெரியும் வண்ணதாசனை வாசிப்பவர்கள் எப்படி என்று.

பாலன் சுரேஷ்பாபு

அன்புள்ள பாலன்,

நலம்.

ஓர் எழுத்தாளர் அவரது வாசகருக்கு உருவாக்கியளிக்கும் சுயம் மகிழ்ச்சி அளிக்கிறது.

பொதுவாகப் பேரிலக்கியங்களை சொந்த மொழியில் வாசிப்பதே நல்லது. அதிலும் கருத்துக்களை விட வெளிப்பாட்டு நுண்மைக்கு அதிக இடமளிக்கும் வண்ணதாசனின் வாசகர்கள். சொந்த மொழி எப்படியோ ஒரு ஆக்கத்தை இன்னும் அதிக நெருக்கமாக ஆக்குகிறது- மோசமான மொழியாக்கத்திலும்கூட.

தமிழில் கரமசோவ் சகோதரர்கள் புவியரசு மொழியாக்கத்தில் வெளிவந்திருக்கிறது. நான் இன்னும் வாசிக்கவில்லை. நல்ல மொழியாக்கம் என்று நண்பர்கள் சொன்னார்கள். குற்றமும் தண்டனையும், அசடன் இரு நாவல்களும் எம்.ஏ.சுசீலா மொழியாக்கத்தில் மதுரை பாரதி புத்தகநிலைய வெளியீடாக வந்துள்ளன. மிகச்சிறப்பான மொழியாக்கம்.

அன்னா கரீனினா நா.தர்மராஜன் மொழியாக்கத்தில் பாரதி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதுவும் நல்ல மொழியாக்கமே.

போரும் அமைதியும் டி எஸ் சொக்கலிங்கம் அவர்களால் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டது. தமிழ் மொழியாக்கங்களில் அது ஒரு சாதனை. அதுவும் இப்போது வாங்கக்கிடைக்கிறது.

ஜெ

இரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி

பேரா.நா.தர்மராஜன்

குற்றமும் தண்டனையும்

தஸ்தயெவ்ஸ்கி தமிழில்…

அசடனும் ஞானியும்..

http://www.sramakrishnan.com/?p=2066


கரமசோவ் சகோதரர்கள் புவியரசு

முந்தைய கட்டுரைகூடங்குளம்
அடுத்த கட்டுரைவளைகுடா பயணம்