அஞ்சலி-மனோகர்

அன்பின் ஜெ..

கூடலூர் மனோகரைப் பற்றி சில முறை எழுதியுள்ளேன்.

கடந்த அக்டோபர் மாதம் அவர் வயிற்றில் புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஐந்து மாதங்கள் போராடி, முந்தாநாள் மாலை 3 மணிக்கு அவர் மரணம் எய்தினார்.

4 வருடங்கள் ஆந்திர மலைவாழ் மக்களுக்காகப் பணியாற்றி, பின் கடந்த 16 வருடங்களாக கூடலூர் ஆதிவாசி மக்களின் முன்னேற்றத்துக்காக, அவர்களுடனே வாழ்ந்து உழைத்த ஒரு உன்னதமான மனிதர்.

தன்னைத் தேடி வரும் எந்த ஒரு புகழின் வெளிச்சத்தையும் விரும்பாமல், ஒரு மாபெரும் முயற்சியில் ஒரு தூணாக இருந்து வாழ்ந்து மறைந்தார்.

உணர்ச்சி மேலீட்டால், அவரைப் பற்றி மேலே ஏதும் எழுத இயலவில்லை.

அன்புடன்,

பாலா

அன்புள்ள பாலா,

நான் மனோகரை சந்திக்கவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் அதற்காக மெனக்கெட்டு செல்வதில் ஏதோ ஒரு பிழை இருப்பதாகவும் தோன்றியது.

தன் வாழ்க்கையைத் தானே தெரிந்துகொண்டவர்கள் அதிருஷ்டசாலிகள். அவர்கள் முழுமையடைகிறார்கள்.

மனோகர் அதிருஷ்டசாலி.

ஜெ

முந்தைய கட்டுரைஇந்தியா ஒன்றா?
அடுத்த கட்டுரைமாடு – கடிதங்கள்