கீழ்வாலை, பள்ளூர், சத்தியமங்கலம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
சமீபத்தில் சென்று வந்த கீழ்வாலை, பள்ளூர், சத்தியமங்கலம் ஊர்களை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள பாறை ஓவியங்களில் மிகவும் முக்கியமானது கீழ்வாலை பாறை ஓவியங்கள் ஆகும். இங்கு மூன்று இடங்களில் இருந்தாலும், ஒரு இடத்தில மட்டுமே ஓவியங்கள் தெளிவாகவும், நிறைந்தும் காணப்படுகின்றன. இங்கு மிகவும் சிறப்பானது, பறவை முகம் கொண்ட மனிதர்கள் ஓவியம் ஆகும். இது பறவை முகமூடி அணிந்த மனிதர்களை குறிக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதோடு, இங்கு காணப்படும் குறியீடுகள் சிந்து சமவெளி நாகரிகத்தில் பயன்படுத்திய குறியீடுகளுடன் ஒத்து போவது இன்னொரு சிறப்பு. இங்கு தற்செயலாக கலை வரலாற்று ஆய்வாளர் திரு காந்திராஜன் அவர்களை சந்தித்திதேன். என்னுடைய வேண்டுகோளின்படி, அந்த பாறை ஓவியங்களை அவர் விளக்கினார். (அந்த காட்சிப் பதிவையும் பதிவேற்றம் செய்து இருக்கிறேன்). காந்திராஜன் தனியொரு மனிதராக, எந்த ஒரு அமைப்பையும் சாராமல், தமிழ்நாட்டு பாறை ஓவியங்களை ஆய்வு செய்து வருபவர். அதோடு, பல பாறை ஓவியங்களை கண்டுபிடித்தும் இருக்கிறார். பெரும்பாலும் பயணத்தில் இருப்பவர்.

அவர் குறித்த சுட்டிகள் :1) http://www.hindu.com/2008/01/17/stories/2008011759090900.htm

2) http://www.thehindu.com/todays-paper/article371630.ece

பள்ளூர், காஞ்சிபுரத்தில் இருந்து திருமால்பூர் செல்லும் வழியில் இருக்கிறது. விவசாயி நாகப்பன் அவர்கள் தன வயலில் உழும் போது கி. பி. ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த மூன்று புத்தர் சிலைகள் கிடைத்தன. அவருக்கு பிறகு, அவர் மகன் தற்போது பார்த்து கொள்கிறார். தற்போது சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் உதவியின் மூலம் அந்த சிலைகள் ஒரு கட்டிடத்தினுள் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த தெருவின் பேரே தற்போது புத்தர் தெருவாகி விட்டது. பொதுவாக தமிழ்நாட்டில் புத்தர் சிலைகள் கிடைப்பது அரிதான நிலையில், பள்ளூர் முக்கியத்துவம் பெறுகிறது.

சத்தியமங்கலம் (என் சொந்த ஊர், உங்கள் பயணத்தின் முதல் நாள் நீங்கள் கடந்த ஊர்) கோட்டை, திப்பு சுல்தான் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. நெடு நாட்களாக நானும் திப்பு சுல்தான் கட்டியது என்றே நம்பினேன். ஆனால திருமலை நாயக்கர் இந்த கோட்டையை கட்டி, தன் மருமகனை காவலுக்கு வைத்து இருக்கிறார். அவருக்கு பிறகு ஹைதர் அலி கைப்பற்றினார். அதற்கு பிறகு திப்பு அதன் பின் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி என்று இந்த கோட்டைக்கு என்று தனி வரலாறே இருக்கிறது. தமிழக-கர்நாடக எல்லையில் இருப்பதால் சத்தியமங்கலம் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து இருக்கிறது.

இந்த இடங்களை பற்றி இணையத்தில் பதிவு செய்தவை

விக்கிபீடியா கட்டுரை

1) http://en.wikipedia.org/wiki/Kilvalai

யு டியூப் காணொளிகள்

கீழ்வாலை
1) http://www.youtube.com/watch?v=UEgUvq759Uk&feature=plcp&context=C345d8b9UDOEgsToPDskJUoVMq_X47l0F_eleZhE2d

2) http://www.youtube.com/watch?v=vJ9bUnOLyes&feature=related

3) http://www.youtube.com/watch?v=2zJcYkXCm2Q&feature=related

4) http://www.youtube.com/watch?v=7riu9GK_OLs&feature=related

5) http://www.youtube.com/watch?v=4giSnvEXMHM&feature=related

6) http://www.youtube.com/watch?v=3muf4UuM1Ao&feature=related

பள்ளூர்

1) http://www.youtube.com/watch?v=Hr5I7sqSDng&list=UUppaK1uqALtjRqhta8L0EKw&index=9&feature=plcp

சத்தியமங்கலம்

1) http://www.youtube.com/watch?v=MQbdYD-Ex_s&feature=related

2) http://www.youtube.com/watch?v=XW0ov9-ueHA&feature=related

விக்கிமபியா இணைப்பு சுட்டி

1) கீழ்வாலை

2) கீழ்வாலை பாறை ஓவியம்

3) பள்ளூர் புத்தர் கோவில்

நன்றி,
தங்கள் அன்புள்ள
சரவணக்குமார்.
[email protected]

முந்தைய கட்டுரைசங்க இலக்கியம் வாசிக்க…
அடுத்த கட்டுரையானைமொழி