பயணம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
 
                                         வணக்கம். உங்கள் ஆஸ்திரேலியா பயணம் இனிதே அமைந்திட என் வாழ்த்துக்கள். வெளிநாட்டினரை கூர்ந்து கவனியுங்கள். அடுத்தவர்களை அநாவசியமாக ஏறிடாத பார்வையும், தேவையில்லாமல் அடுத்தவர்களை அலைக்கழிக்காத பண்பையும்,  தங்கள் காரியத்தில் மட்டும் கண்ணாக இருந்து பந்தா இல்லாமல்  நடந்து கொள்வதையும் சிறிது கூர்ந்து நோக்குங்கள்.  உங்கள் பயணம்  நல்ல படியாக   முடிந்து  நீங்கள் எழுதப் போகும் நீண்ட அனுபவத்தை அனுபவிக்க  ஆவலுடன் காத்திருக்கிறேன்.  வாழ்த்துக்கள் !!!!!!!
 
அன்புடன்

K.குப்பன்
சிங்கப்பூர்

 

 

http://aganaazhigai.blogspot.com/2009/04/blog-post_17.html
 
தாய்லாந்து : கொண்டாட்டங்களின் நகரம் என்ற எனது புதிய பதிவை வாசிக்க அன்புடன் அழைக்கிறேன்.
 
அன்புடன்,
“அகநாழிகை”
பொன்.வாசுதேவன்

 

 

 

அன்புள்ள ஜெயமோகன்,

உங்கள் ஆஸ்திரேலிய பயண அனுபவங்களை வாசிக்க ஆர்வமாக இருக்கிறேன். பொதுவாக பயணம் பற்றிய தகவல்கள் இப்போது அவ்வளவு முக்கியமில்லை. அவை கூகில் இணைய தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. எது முக்கியமென்றால் பயணத்தில் அடையும் அனுபவங்களையும் எண்ணங்களையும் தான். அதை ஒரு நல்ல எழுத்தாளர் சிறப்பாக எழுத முடியும் என்று எண்ணுகிறேன். நீங்கள் சிறப்பாக எழுதுவீற்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது

செவ்வம் சுப்ரமணியம்
பினாங்கு

 

அன்புள்ள ஜெயமோகன்

ஆஸ்திரேலியப்பயணம் சிறப்பாக நடக்கிறதென எண்ணுகிறேன். எழுத்தளார்கள் நிறையவே பயணம்செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களின் எழுத்தாற்றல் வளரும். ஆனால் பொதுவாக அதற்கான வாய்ப்புகள் நம் சமூகத்தில் இல்லை. நீங்கள் தமிழில் ஒரு விதிவிலக்கு. உங்களைத்தேடி அரிய வாய்ப்பு எப்போதும் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை நீங்கள் சிறப்பாக பயன்படுத்தவேண்டும் வாழ்த்துக்கள்

சிவானந்தன்

முந்தைய கட்டுரைஊர்திரும்புதல்
அடுத்த கட்டுரைசாப்டாச்சா?”ஒருகடிதம்