பிறந்தநாள்

நேற்று என்னுடைய நாற்பத்தி ஏழாவது பிறந்தநாள். அன்னிய மண்ணில். மெல்பர்ன் நகரில் இருக்கிறேன். வழக்கமாகவே பிறந்தநாளுக்கு கொண்டாட்டம் ஏதும் இருப்பதில்லை. மின்னஞ்சல்கள் பார்ப்பதுடன் சரி. இங்கே மின்னஞ்சல்களை மதியம்தான் பார்க்க முடிந்தது. சில நண்பர்கள் வாழ்த்து சொன்னார்கள். அ.முத்துலிங்கம் அவர்களின் மின்னஞ்சல் வந்திருந்தது. 

காலையில் அருண்மொழி எழுப்பி இன்று உன் பிறந்தநாள் என்றாள். நாலைந்துநாள் முன்னால் சிட்னியில் லெ.முருகபூபதி என் நூலைப்பார்த்துவிட்டு சொல்லியிருந்தார். என்றாலும் மறந்துவிட்டேன். காலையிலெ ழுந்து அருகே உள்ள பூங்காவில் நானும் அருண்மொழியும் டாக்டர் நடேசனும் நடக்கசென்றோம். முருகபூபதியும் சிட்னியிலிருந்து ஆசி.கந்தராஜாவும் கூப்பிட்டு வாழ்த்து சொன்னார்கள்

பிறந்தநாட்களை மறப்பதில் ஒரு இயல்பான தன்மை இருக்கிறதென எண்ணுகிறேன். அல்லது வயதாக ஆக பிறந்தநாட்களை திட்டமிட்டே மறப்போமோ என்னவோ.

நினைத்துவைத்திருந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

முந்தைய கட்டுரைவாசிப்பில் நுழைதல்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம்,ஏழாம் உலகம்:கடிதங்கள்