பயணம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். நீங்கள் எழுதிவரும் பயணக்குறிப்புகளை ஒவ்வொரு நாளும் ஆவலோடு படித்துவருகிறேன்.
மூடுபிதரி தவிர நீங்கள் பார்த்துவரும் எந்த இடத்தையும் நான் பார்த்ததில்லை. இப்போது உங்கள் எழுத்து வழியாகப்
பார்த்துக்கொண்டிருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாகவும் ஏக்கமாகவும் உள்ளது.
ஒவ்வொரு வேலையையும் மிகவும் பொறுப்போடு செய்கிறீர்கள். நாள்முழுக்க அலைந்த களைப்பைக்கூடப்
பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நாள் அனுபவத்தையும் அன்றன்றே எழுதிமுடித்துவிட்டுத்தான் உறங்கச் செல்கிறீர்கள்.
அன்றைய பயண அனுபவத்தின் சுவடுகள் முழுதுமாகப் படிந்திருக்கும்படியான குறிப்புகள். ஒரு புனைகதைக்குரிய
சுவாரஸ்யத்துடன் படித்துவருகிறேன்.

உங்களுக்கும் குழுவில் உள்ள அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இறைவனின் அருள் உங்கள் அனைவருக்கும் பரிபூரணமாகக் கிடைக்கப் பிரார்த்தனை செய்துகொள்கிறேன்.
நல்லபடியாகத் திரும்பி வாருங்கள்.

அன்புடன்
பாவண்ணன்

”ஒட்டகம் மேய்க்கும் பையன் புகைப்படம் எடுத்த காமிராவை அன்பளிப்பாகக் கேட்டான். இல்லையென்றால் பணம் கொடுங்கள் என அன்பாகக் கேட்டு ஐம்பது ரூபாய் வாங்கிக்கொண்டான். மேலே செல்லச்செல்ல அந்நிலப்பகுதி ஒரு புதிய தேசத்துக்கே வந்துவிட்டது போன்ற பிரமையை அளித்தது. கிருஷ்ணன்-ராதை சிற்பங்களில் ராதை அணிந்திருப்பதுபோல உடையணிந்த பெண்கள். அழுத்தமான நிறங்களில் பாவாடைகள். தலையில் சுற்றிவரும் மேலாடை,பளபளக்கும் ஜாக்கெட்,கைநிறைய சங்குவளைகள். ஆண்கள் வண்ணத்தலைப்பாகை சுற்றிப் பளிச்சிடும் வண்ணங்களில் சட்டை வேட்டி அணிந்து சரித்திரப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல இருந்தனர்.”

ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கும் டோலவீரா பகுதியின் உடையணிந்த பாத்திரங்களுடன் கூடிய ஒரு அழகிய குஜராத்தி மலையாளப் படப் பாடல் இங்கே

http://www.youtube.com/watch?v=juZjLoj8WL4

ராஜன்

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 21 – அசல்கர், தில்வாரா
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 22 – மிர்பூர், உதய்புர்-நகடா