ந.முத்துசாமிக்கு பத்மஸ்ரீ

தமிழின் நவீனநாடகத்தை உருவாக்கியவர்கள் என இருவரைச் சொல்வது மரபு. ந.முத்துசாமி, செ.ராமானுஜம். முத்துசாமி தமிழின் சிறந்த சிறுகதைகள் சிலவற்றை எழுதியவர். தமிழின் சிறந்த சிறுகதைகளின் சிறிய பட்டியலில் கூட அவரது நீர்மை கதை இடம்பெற்றிருக்கும். பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பித்தார்.தொடர்ந்து தெருக்கூத்தை மீட்டு எடுப்பதில் ஆர்வம் காட்டினார். நாடகங்களுக்காகவும் கூத்துக்காகவும் கூத்துப்பட்டறை என்ற அமைப்பை நிறுவி நடத்திவருகிறார்.

ந.முத்துசாமிக்கு இவ்வருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. முத்துசாமிக்கு வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைபயணம் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 13 – அஜந்தா