எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

2011 ம் ஆண்டுக்கான கனடாவின் இயல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்நாள் சாதனைக்கான இலக்கிய விருது இது. கனடா இலக்கியத்தோட்டமும் யார்க் பல்கலையும் இணைந்து வழங்கும் இவ்விருது இவ்வருடம் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிக்க விருது இது. தமிழ் நாவல், சிறுகதைத் தளத்திலும், நாடகங்களிலும் தீவிரமான பங்களிப்பாற்றிவரும் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

இலக்கியத்தை எல்லா அர்த்தத்திலும் ஒரு வாழ்நாள் சேவையாக செய்து வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன். நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்துவதிலும், ஒரு இயக்கமாக அதை நிலைநிறுத்துவதிலும் தொடர்ச்சியான ஈடுபாட்டைக் காட்டிவருபவர். எஸ்.ராமகிருஷ்ணனுக்கு என் சார்பிலும் நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துக்கள்.

முந்தைய கட்டுரைமடிக்கணினி
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா