கெட்டவார்த்தைகள்:கடிதங்கள்

ஜெ..

கெட்ட வார்த்தைகள் கட்டுரை நெம்ப நல்லா இருந்திச்சுங்க..  நம் மூர்னு மட்டுமில்லீங்.. வடக்கியும் அப்பிடித்தானுங்க.. பஞ்சாபிகள் அதுவும் சர்தார்ங்க ளுக்கு கெட்ட வார்த்த பேசறதுன்ன, பாதுஷா சாப்புடற மாதிரிங்க..  பெஹன் சோத் அங்க எல்லாரும் சொல்வாங்க.. அரே பெஹன்சோத்.. இதர் ஆஜா அப்பிடீன்னுதான் பொதுவா ஃப்ரண்டஸ் ஒர்த்தர ஒர்த்தர் கூப்புட்டுக்குவாங்க. அப்பாவே பையனை அப்படித்தான் கூப்புடுவாருன்னு சர்தாருங்கள கிண்டல் பண்ணுவாங்க. அதுவும் உடல் உறுப்புகள் த்தி கெட்ட வார்த்தைகள அவுங்க ரொம்ப சகஜமாப் பேசறாங்க.. அதத் தமிழ்ல மொழி பெயர்த்து நான் டென்ஷனாயிக்குவனுங்க..

நான் MBA படிக்க குஜராத் போன புதுசுங்க.. அப்ப எங்கோட படிச்ச ஒரு பார்ஸிப் பையன் ங்கோத்தா ன்னா என்னன்னு கேட்டானுங்க.. அப்ப, என்ற பக்கத்தால இருந்த மெட்ராஸ் பொண்ணு, அப்படீன்னா, f*** you அப்படீன்னு சொல்லிச்சிங்க. நானும் அப்படித்தான்னு நெனச்சிட்டிருந்தனுங்க.. அது உவத்தல்ங்கற வார்த்தையில இருந்து வந்துச்சுன்னு சொன்னது நெம்ப ஏமாத்தமா இருக்குதுங்க.. நெசமாலுமேங்களா??

அன்புடன்

பாலா

 

 

அன்புள்ள பாலா

கெட்டவார்த்தைகளை இனிமேல் கெட்டுப்போன வார்த்தைகள் என ஏன் சொல்லக்கூடது? சில வார்த்தைகள் உறைகுத்தி புளிக்கவைக்கபப்ட்டவை
ஜெ

 

 

 

அன்புள்ள ஜெ…சார்,

 

கெட்டவார்த்தைகள் பற்றி ஒரு கெட்டுரையே எழுதி விட்டீர்கள். ஆமாம். பல கெட்ட வார்த்தைகள் எந்த விட சங்கடமும் கொடுக்காமல் பாராட்டுவதற்கும் பயன்படுகிறது. என் சக ஊழியர் ஒருவர் அடிக்கடி என்னை பாராட்டப் பயன்படுத்தும் வார்த்தை இது : அக்கா மக! கொன்னுட்டீங்க சார்‘ . வேலூர், ஆரணி புறங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தை இது. ஒரு நீண்ட வார்த்தையின் சுருக்கம்.


இளம்பரிதி

 

அன்புள்ள இளம்பரிதி

தி.ஜானகிராமன் எம்.டி.ராமனாதனின் பரமரசிகர்.ஒருமுறை ராமனாதனின் பாட்டைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டு சுந்தர ராமசாமியின் தொடையில் ஓங்கி அறைந்து கூவினாராம் ”தாயோளி கொன்னுட்டான்ய!”
ஜெ

அன்புள்ள இலக்குவன்,

கெட்டவார்த்தைகள் ஒரு வகை எல்லை மீறல். நட்பிலும் உணர்வெழுச்சிகளிலும் எல்லாம் எல்லை மீறலுக்கு கெட்டவார்த்தைகள் கைகொடுப்பது  அதனால்தான். பல பெரியவர்கள் உற்சாகத்தால் கெட்டவார்த்தைகளில் கூவுவதைக் கேட்டிருக்கிறேன். என் அப்பா என்னை ‘நாயின்றே மகன்’ என்றும் ‘எரப்பாளியுடெ மகன்’ என்றும் தான் திட்டுவார். அப்பாவின் நண்பர் சிரித்துக்கொண்டு ”நீ விளிக்கது செரி, அவன் அதைச் சம்மதிச்சன்னா உனக்கு பிர்ச்சினை ஆயிஉம் பாத்துக்கோ” என்றார்

ஜெ 

 

கெட்டவார்த்தைகள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்,ஏழாம் உலகம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகவிதைகள்:கடிதங்கள்