இரண்டு சில்லறைக் கருத்துக்கள்

அன்புள்ள ஜெ,

 

காலச்சுவடு ஏப்ரல் இதழில் அகோரிகளுக்கும் நான் கடவுள் என்ற கொள்கைக்கும் சம்பந்தமில்லை என்றும் அதுகூடத் தெரியாமல் நீங்கள் எழுதியிருப்பதாகவும் ஒருவர் சொல்லியிருக்கிறாரே. அதே இதழில் நீங்கள் எழுதிய தேர்வுகட்டுரையில் அரசுப்பள்ளிகளை பாராட்டவில்லை என்று ஒருவர் உங்களை பல பத்திகளுக்கு வசைபாடியிருக்கிறார், கவனித்தீர்களா?

 

சண்முகம்

 

 

அன்புள்ள சண்முகம்,

 

காலச்சுவடு இதழ் கிட்டத்தட்ட பத்து வருடங்களாகவே என் மீது அவதூறுகளையும் வசைகளையும் கொட்டிவருகிறது. அனேகமாக எல்லா இதழிலும். எந்த ஒரு எழுத்தாளனையும் இம்மாதிரி வசைகள், அவதூறுகள், வெறுப்பு உமிழல்கள் மூலம் எதுவும் செய்துவிடமுடியாது. அது அவர்களுக்குப் புரியவில்லை.

 

முதலில் தேர்வு கட்டுரை குறித்து சொல்லப்பட்டிருப்பதைப் படித்தேன். அரசுப்பள்ளிகளைப் பற்றியும் ஆசிரியர்களைப்பற்றியும் நான் தொடர்ச்சியாக என் மதிப்பை பதிவுசெய்து வந்திருப்பதை வாசகர்கள் அறிவார்கள். . .

 

இம்மாதிரிக் கட்டுரைகளின் மனநிலை எளிமையானது. இந்தவசை அந்த இதழின் ஆசிரியரை மகிழ்விக்கும் என எழுத்தாளர் எண்ணுகிறார். ஆகவே சம்பந்த்மே இல்லாமல் சில பத்திகள் வசை. வேடிக்கைதான்.

 

நான் கடவுள் குறித்து.  எந்த விஷயத்திலும் அடிப்படை வாசிப்புகூட இல்லாத இதழாளர்கள் எல்லாவற்றைப் பற்றியும் கருத்து சொல்கிறார்கள். இதுவும் அதில் ஒன்று.

 

அகோரிகளின் மந்திரம் சிவோகம்‘. அதுதான் படம் முழுக்க ஒலிக்கிறது. சிவ+அஹம் என்றால் நானே சிவன் என்று பொருள்.

 

ஜெ

முந்தைய கட்டுரைபயணம்
அடுத்த கட்டுரைகுடி.கடிதங்கள்