அன்புள்ள ஜெயமோகன் சமீபத்தில் இணையத்தில் ஒரு பதிவைப் படித்தேன். இயேசு இந்தியாவில் வசித்தார் என்று கூறும் பதிவு அது. வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்துத்துவா உளறல் என்று ஒதுக்கி இருப்பேன். ஆனால் இது ஓஷோவின் உரை.அதற்கான லிங்கைக் கீழே கொடுத்துள்ளேன் இது வெறும் யூகம் தானா? இல்லை இதற்கு ஆதரங்கள் இருக்கிறதா? இது பற்றி தங்கள் கருத்தை அறிய ஆவல் ஏற்கனவே இது பற்றி எழுதியிருந்தால் சுட்டியை மட்டுமாவது அனுப்பவும்.
நன்றி,
அன்புடன்
கார்த்திகேயன்.J
அன்புள்ள கார்த்திகேயன்
ஏசுவின் வாழ்க்கையில் அவரது குழந்தைப்பருவத்துக்கும் இளமைப்பருவத்திற்கும் நடுவே ஒரு அறியப்படாத பகுதி உள்ளது. அந்தப்பகுதியில் அவர் இந்தியாவுக்கு வந்திருக்கலாம். அவர் வாழ்ந்த பகுதி இந்தியாவும் சீனாவும் ஐரோப்பாவுடன் தொடர்புகொள்ளும் வழியில் , பட்டுப்பாதை ஓரமாக, இருந்தது. இந்தியாவின் ஞானமரபு கிறிஸ்துவுக்கு முன்னரே அப்பகுதியெங்கும் அறியப்பட்டிருந்தது. குறிப்பாக பௌத்தமும் சமணமும். பௌத்தர்களும் சமணர்களும் வணிகர்கள் என்பதனாலும், அவர்கள் மதத்தைப்பரப்புவதில் தீவிரமான ஈடுபாடும் அதற்கான அமைப்பும் கொண்டவர்கள் என்பதனாலும் அது நிகழ்ந்திருக்கலாம். கிறிஸ்துவின் போதனைகளில் சமணத் தாக்கம் அதிகம் உண்டு.
இந்தியா அக்காலகட்டத்தில் ஒரு ஞானபூமியாக, கல்வி மற்றும் தத்துவம் ஓங்கிய பகுதியாக எண்ணப்பட்டது. ஏசு பிறந்தபோது கிழக்கிலிருந்து வந்த மூன்று ஞானியரால் அவர் அடையாளம் காணப்பட்டார் என்ற தொன்மத்திற்குப் பின்னாலுள்ள மனநிலையும் இதுவே. ஆகவே ஏராளமானவர்கள் இந்தியாவுக்குக் கல்விகற்க வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு ஏசு வந்திருக்கலாம் என ஊகிக்கிறார்கள்.
ஆனால் இந்தக் கருத்துக்குத் திட்டவட்டமான சான்றுகள் ஏதுமில்லை. இவை சந்தர்ப்பம் சார்ந்த ஊகங்கள் மட்டுமே. எனவே நான் இவற்றைப் பெரிதாக நினைப்பதில்லை. ஏசு இந்தியாவுக்கு வந்திருந்தாலும் வராவிட்டாலும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. அவரை அறிவதிலும் அணுகுவதிலும் அது ஒரு விஷயமே அல்ல. எங்கு பிறந்திருந்தாலும் எங்கே கல்விகற்றாலும் அவர் மானுடத்க்குச் சொந்தமானவர்.
கிறிஸ்துவம் பற்றி
கிறிஸ்து கிருஷ்ணன் பகுத்தறிவு 1
கிறிஸ்து கிருஷ்ணன் பகுத்தறிவு 2
மதம்சார்ந்த சமநிலை
மனிதாபிமான வணிகம்
அவதார் ஒரு வாக்குமூலம்
சிலுவையின் பெயரால்
இருவர்
ஆண்டனி டெமெல்லோ
சில பொது இணைப்புகள்
http://www.catholicleague.org/research/deputy.htm
http://www.ansa.it/site/notizie/awnplus/english/news/2008-11-06_106276837.html
http://www.jpost.com/servlet/Satellite?cid=1225199611398&pagename=JPost%2FJPArticle%2FShowFull
http://www.reuters.com/article/worldNews/idUSTRE4A96GZ20081110
மதம் , ஆன்மீகம்,கிறித்தவம் :ஒரு கடிதம்
வெளியே செல்லும் வழி – மேரி கொரெல்லியின் மாஸ்டர் கிறிஸ்டியன்
கத்தோலிக்கமதம் பெண்ணுரிமை-ஒரு கடிதம்
பிற நூல் சுருக்கங்கள்