கார்ல்சகனும் சிவானந்த சர்மாவும்

அன்புள்ள ஜெ,
வணக்கம். சென்ற மாதம் சொல்வனத்திற்கு ஒரு சிறுகதை அனுப்பியிருந்தேன். இந்த இதழில் பிரசுரமாகியுள்ளது “லீலை”

கதைகளை உங்களிடம் அனுப்பி தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைப்பேன். இருந்தாலும் இதை உங்களிடம் பகிர்வதற்குக் காரணம், ‘கடவுளை நேரில் காணுதல்’ கட்டுரையில் கார்ல் சாகனின் ‘காண்டாக்ட்’ நாவல் பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்ததும் எனக்கு ஏற்பட்ட உற்சாகம் தான். நான் காண்டாக்ட் படித்ததில்லை. உங்களின் கட்டுரை வருவதற்கு ஒரு மாதம் முன்பு, பரிணாமத்தின் அடுத்த கட்டத்திற்கு வளர்ந்த மனிதர்கள், பூமியைக் கைவிட்டுப் போதல், பேச்சு மொழியல்லாது பிரக்ஞைப் பூர்வமாக தொடர்பு கொள்ளல், காலத்தை மீறல் என்று சில விஷயங்களை அடிப்படையாக வைத்துச் சுருக்கமாக (காண்டாக்ட் அளவிற்கு விரிவாகவோ, அவர் பேசும் தளத்திலோ அல்ல) ஒரு சிறுகதையாக எழுதி சொல்வனத்திற்கு அனுப்பியிருந்தேன். ஒரு பெரும் அறிவியல் அறிஞரின் சிந்தனையில் ஒரு சிறுதுளி அதிர்ஷ்டவசமாக எனக்குள்ளும் விழுந்துவிட்டதோ என ஒரு மகிழ்ச்சி உங்கள் கட்டுரையைப் பார்த்தவுடன் வந்தது. அதை உங்களுடன் பகிரந்து கொள்ள வேண்டுமென விருப்பம்.

நன்றி,
அன்புடன்,
பிரகாஷ்.

அன்புள்ள பிரகாஷ்

நல்ல கதை.

ஆனால் அறிவியல்கதைகளில் இரு முக்கியமான அம்சங்களை கருத்தில்கொள்ளவேண்டும். சிக்கல் இல்லாமல் கதையுடன் இணைந்து அறிவியலை விளக்குதல் ஒன்று. முற்றிலும் புதிய சூழலை உண்மையான சித்திரமாக சித்தரித்துக்காட்டுதல் இரண்டு

மேலும் முயலலாம்

வாழ்த்துக்கள்

ஜெ

அன்புள்ள ஜெ

இந்தக் குறிப்பைப் பார்க்கவும்

முதல்முறையாக ஒரு தாழ்த்தப்பட்டவர் ஒரு பாரம்பரியம் மிக்க பிராமண மடத்தில் துறவியாகிறார்.

http://haindavakeralam.com/HKPage.aspx?PageID=15027&SKIN=D

இந்துமதம் சம்ஸ்கிருதம் பிராமணர் கட்டுரைக்கான ஒரு பதில் இது

ஜடாயு

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைதவில்