உப்பு,மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ
மிகவும் அழுத்தமான, மற்றும் அடர்த்தியான கட்டுரை. இரண்டு அல்லது மூன்று முறை வாசித்து இருப்பேன்.

மாறு பட்ட தாவரங்கள் – சூழலை (Environment) அழித்துப் பஞ்சம் ஏற்படுத்த கூடும் – என்பது அடிக்கடி வரலாற்றில் தெரிய வருகிறது. நீங்கள் குறிப்பிட்ட வேலி தவிர இண்டிகோ (indigo) தாவரத்தின் பாதிப்புகள் –
http://sos-arsenic.net/english/homegarden/indigo.html காணலாம்

போத்ஸ்வானா(Botswana) விலும் மாட்டுத் தீவனத்திற்காக (ஏற்றுமதி செய்ய ) பயிரிடப்பட்ட தாவரங்கள் – அந்த நிலத்தின் சத்துகளை மாற்றிவிட்டதால் பெரும் பஞ்சத்திற்கு ஆளானர்கள்.

‘நமக்குத் தெரியாத விஷயங்களே நம்மை பாதிக்கும்’ என நசீம் நிகோலஸ் தலீப் (Nassim Nicholas Taleb ) – தனது ‘கார் அன்னம்’ (Black Swan) புததகத்தில் குறிபிட்டுள்ளார். மாறுபட்ட நோக்குடைய சுவாரசியமான புத்தகம்.
http://en.wikipedia.org/wiki/The_Black_Swan_(Taleb_book) மெல்லிய அட்டை வடிவில் கிடைக்கிறது

இதனை அரிய உண்மையாகத் தெரிந்து கொண்டேன்,

காந்தியை மீண்டும் இணைத்திருப்பது பொருத்தமாக இருந்தது,

புதிதாக ஒரு பழைய விஷயத்தைத் தெரிவித்ததற்கு நன்றி

அன்புடன்
முரளி

அன்புள்ள ஜெ,

Salt, Salary என்ற சொற்கள், Salarium என்று latin சொல்லில் இருந்தே வந்தன.
Root word ஒன்று தான் !


With Warm Regards,
K.R.Athiyaman

ஆம், தமிழிலும் சம்பளம் என்பது சம்பா+அளம் என்ற சொல் என்று சொல்லப்படுவதுண்டு . அதாவது நெல்லும் உப்பும் [தொ.பரமசிவம்] எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் உப்பு விற்கும் உமணர் முக்கியமான சாதியினர். அவர்களின் பெரிய சுமைவண்டிகளைப்பற்றிய வர்ணனையை நாம் நிறைய பார்க்கலாம். ஆனால் தென்னகத்தில் உப்பு முக்கியமான வணிகப்பொருளாக இருந்திருக்க நியாயமில்லை என்றே நினைக்கிறேன்

ஜெ

உலகின் மிகப்பெரிய வேலி

முந்தைய கட்டுரைமராத்தி-தமிழ் கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருமந்திரம் ஒரு கடிதம்