டியர் ஜெயமோகன்,
உங்கள் பதிலிற்கு நன்றி.
நான் சொல்ல வந்ததும் அது தான்.
மேலும், alice in wonderland உம் swami and friends உம் ஒப்பிட்டதுகுழந்தைகள் படிக்க கூடிய நாவல் என்ற அளவில் மட்டுமே. alice in wonderlandஒரு தத்துவ பொருள் மட்டுமல்லாமல் ஓர் கணித குறியிட்டு கதையாகவும் பார்க்கபடுகிறது. உதரணத்திற்கு, alice யை x என்று வைத்து கொள்வதாகவும் , அவள்ஒரு வித தண்ணியை குடித்தவுடன் பெரிய உருவம் எடுக்கிறாள் , அது ‘x’பெருக்கல் ஒரு எண் ஆக கொள்ளலாம். அதே போல் இன்னொன்றை குடித்தவுடன் சிறியஉருவம்ஆகிறாள். அது division ஆக கொள்ளலாம். Alice ஒரு algebra குறியீடு என்று விரிவடைகிறது. Lewis Carrol ஒரு கணித வாத்தியாராக உள்ளதால் இந்தகுறியீடு நிறுவ எளிது.
உங்கள் பார்வையில் ஒரு நாவல் அல்லது சிறந்த எழுத்து, கலை என்பது மனிதமனவெளியுடனே வளரவும், மன வெளியை வளர்ப்பதுவும் ஆகும். அது உருண்டோடி ஒரு பிரும்மாண்ட பேரு வெளியில் மனதை இழுத்து விடுவதே.
நான் swami and friends ஐ பார்ப்பது மனத்தின் ஆரம்பக்கால வளர்ச்சியின்ஓர் பிரதிபலிப்பாகவே. அது வளர்வதில்லை, ஒரே இடத்தில் நிற்கும் கண்ணாடி.யார் வேண்டுமானாலும் தங்களை பார்த்துக்கொள்ளலாம். பார்த்து விட்டு வேறுஇடத்திற்கு சென்று விடலாம். ஆனால் யார் பார்த்தாலும் பிரதிபலிப்புஇருக்கும் என்பது அதனுடைய சிறப்பு. ஆகவே நிச்சயம் swami and friends cannot be ignored.
நன்றி
பாலா
***
அன்புள்ள பாலா
நான் ஆர்.கெ.நாராயணனை சுவாரசியமற்ற எழுத்தாளர் என்று எங்கும் சொல்லவில்லை. அவரை புறக்கணிக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. ஆர்.கெ.நாராயணனையோ ரஸ்கின் பாண்டையோ பள்ளிப்பருவத்தில் வாசிப்பது நல்லதுதான்.
நான் சொல்வது இலக்கிய மதிப்பீடுகளைப்பற்றி. இந்தியாவின் ஆன்மாவை வெளிப்படுத்திய கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்க, ஆங்கிலத்தில் எழுதி ஐரோப்பியரால் பாராட்டப்பட்டார் என்பதற்காக ஆர்.கெ.நாராயணனை பேரிலக்கியவாதி என்று கொண்டாடுவது நம்மை நாமே சிறுமைசெய்துகொள்வதாகும் என்று மட்டுமே.
நம் ஆன்மாவின் குரலாக ஒலிப்பதுதான் நல்ல எழுத்து. நம் குரலை அவர்கள் கேட்கவேண்டும் என நாம் எதிர்பார்க்கலாம். அவர்கள் விரும்பும்படி குரல் எழுப்ப ஆரம்பித்தால் அது அபத்தமாக ஆகிவிடும்.
ஜெ