நீலி, பிப்ரவரி இதழ்

அன்பு ஆசிரியருக்கு,

நீலியின் பிப்ரவரி 2025 இதழ் வெளிவந்துள்ளது. இந்த இதழில் புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றத்தின் தெருக்கூத்துக்கலைஞரான கெளரியின் நேர்காணலை ஜெயராம் மற்றும் ரம்யா செய்துள்ளனர். அவினேனி பாஸ்கர் தெலுங்கு பெண் எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக தொடராக மொழியாக்க செய்யவிருக்கும் பெண் படைப்பாளர்களில் முதலாவதாகஎண்டபள்ளி பாரதி”-ன் புனைவுலகத்தை அறிமுகம் செய்திருக்கிறார். சமகால மலையாளப் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் மினி P.C-க்கு அடுத்தபடியாக சோனியா செரியனின் படைப்பை கதிரேசன் மொழியாக்கம் செய்துள்ளார். உலகப் பெண் எழுத்தாளர்கள் வரிசையில் சோஃபியா ஸமடாரை இல.சுபத்ரா மொழியாக்கம் செய்துள்ளார்.

உலகப் பெண் தத்துவவாதிகளின் வரிசையில்ஹன்னா ஆரெண்ட்”-ன் சிந்தனைகள் சார்ந்த இரண்டாவது கட்டுரையை சைதன்யா எழுதியுள்ளார். பெண்ணியச் சிந்தனையாளரான எலிஃப் ஷஃபாக்ன் கட்டுரையை விக்னேஷ் ஹரிஹரன் மொழிபெயர்த்துள்ளார். இவரின் கட்டுரைகளை தொடராக மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது.

இந்தியப் பெண் எழுத்தாளர்கள் பொறுத்து மகாஸ்வேதா தேவியின் புனைவுலகத்தை முன்வைத்து மதுமிதாவும், அஷிதாவின் புனைவுலகத்தை முன்வைத்து சுசித்ராவும், மமங் தாய்ன் புனைவுலகத்தை முன்வைத்து கமலதேவியும் கட்டுரைகள் எழுதியுள்ளனர். தமிழ் இலக்கியத்தில் தாய்மகள் உறவு குறித்த சிறுகதைகள் பற்றி லாவண்யா சுந்தர்ராஜனும், .சிவகாமியின் ஆனந்தாயி நாவல் பற்றி ரம்யாவும் கட்டுரைகள் எழுதியுள்ளனர், பெண்ணெழுத்து சார்ந்த விமர்சகர் க.நா.சுப்ரமணியத்தின் மதிப்புரைகளை ஸ்ரீநிவாச கோபாலன் தொகுத்துள்ளார்.

நண்பர்களுடன் இணைந்து செய்யும் இப்பணி மகிழ்வளிக்கிறது. இந்த உரையாடல் சிந்தனைகளை விரிவடையச் செய்வதை ஒவ்வொரு இதழிலும் உணர்கிறோம்

பிப்ரவரி 2025 இதழ்

நீலி குழு

முந்தைய கட்டுரைசவால்களை எதிர்கொள்ளுதல்
அடுத்த கட்டுரைஎகுமா இஷிடா