வணக்கம். மகாபாரதத்தை ஒரு நவீன இலக்கியமாக மறுஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.
இவ்வாண்டின் தொடக்கமாக புதுவை வெண்முரசுக் கூடுகையின் 78வது அமர்வு 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியில் நண்பர் பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன் தொடக்கவுரையாற்றுவார்.
நிகழிடம்: கிருபாநிதி அரிகிருஷ்ணன் “ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி, # 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு:- 9943951908 ; 9843010306
பேசு பகுதி: வெண்முரசு நூல் – 9. “வெய்யோன்” பகுதி 1 செந்தழல்வளையம் (அத்தியாயம் 1 – 3) மற்றும். பகுதி 2 தாழொலிக்கதவுகள் (அத்தியாயம் 4 – 12).
நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.
அரிகிருஷ்ணன்
புதுச்சேரி