ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை

அணுசக்தியில் மின்சாரம் தயாரிப்பது உலகளவில் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கடைசியாக அமைக்கப்பட்ட10 அணு உலைகளும் திட்டமிடப்பட்டதைவிட 300% அதிக செலவில் அமைக்கப்பட்டுள்ளன. கோடி கோடிகயாகக் கொண்டு கொட்டியும் அணுசக்தியிலிருந்து இந்தியா பெறும் மின்சாரத்தின் அளவு கேவலம் 2.7% மட்டுமே. இந்தியாவில் எந்த அணு உலையுமே அது அமைக்கப்பட்ட முழுதிறனுக்கும் உற்பத்தியைச் செய்யவில்லை. திட்டங்கள் துவங்குகையில் எதிர்பார்க்கப்படும் மின்சார அளவுகள் எல்லாம் வெறும் பேப்பர்களிலேயே எழுதப்பட்டுள்ளன. ஆக இந்தப் பெரும் திட்டங்கள் யார் யாருக்கோ இலாபங்களை ஈட்டுவதற்காகவே செய்யப்படுகின்றன எனும் சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.

சிறில் அலெக்ஸ் எழுதிய கட்டுரை    ஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை – 1  தமிழ்பேப்பர் மின்னிதழில்

முந்தைய கட்டுரைகூடங்குளம் கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்