மாயப்பொன், இன்னொரு தெலுங்கு மொழியாக்கம்

என் கதைகளின் தெலுங்கு மொழியாக்கங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அறம் கதைகளின் மொழியாக்கமான நெம்மிநீல (மயில்நீலம்) பாஸ்கர் அவினேனி மொழியாக்கத்தில் வெளியாகி முன்பெப்போதும் எந்த தமிழ்நூலுக்கும் தெலுங்கில் கிடைக்காத வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஏழாம் உலகத்தின் மொழியாக்கமான அதோ லோக (மொழியாக்கம் அவினேனி பாஸ்கர் மற்றும் அனில் குமார் சர்வேபள்ளி) வெளியாகவுள்ளது.

இந்நூல் என் மாயப்பொன் கதையின் தெலுங்கு வடிவம். மொழியாக்கம் ஸ்ரீனிவாஸ் தெப்பல. என் கதைகளில் மாயப்பொன், மயில்கழுத்து இரண்டும்தான் தெலுங்கில் மிக அதிகமாக விரும்பப்பட்ட கதைகள். முதன்மையான எழுத்தாளர்கள் அவற்றைப் பற்றி அங்கே விமர்சனக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். (மலையாளத்திலும் பி.ராமனின் மொழியாக்கத்தில் வெளிவந்த புனைவுக்களியாட்டுக் கதைகளின் தலைப்புக்கதை மாயப்பொன், அது நான்காம் பதிப்பை அடைந்துள்ளது)

தெலுங்கு இலக்கியவாசகர்கள் மேல் ஆழ்ந்த நம்பிக்கை கொள்ளச் செய்கிறது இந்த வாசிப்பு.

நண்பர்கள் இந்நூல்களை தங்கள் தெலுங்கு நண்பர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.

நெம்மிநீல, அறம் கதைகளின் தெலுகு மொழியாக்கம். சாயா புக்ஸ்

முந்தைய கட்டுரைகவிதைகள் ஜனவரி இதழ்
அடுத்த கட்டுரைஅன்பழகி கஜேந்திரா