உளக்குவிப்பு தியானப்பயிற்சி

உளக்குவிப்பு- தியானம் பயிற்சிகள்

இந்தக் காலகட்டத்தின் முதன்மையான சிக்கல்களான கவனக்குவிப்பின்மை, துயில்நீக்கம் ஆகியவற்றுக்கு வாழ்க்கைமுறை சார்ந்த தீர்வென யோகமும் தியானமும் உலகமெங்கும் முன்வைக்கப்படுகின்றன. தத்துவம், கலை ஆகியவற்றுக்கான அறிமுக வகுப்புகள் நடத்தத் தொடங்கியபோது கூடவே கவனக்குவிப்புக்கான வகுப்புகளின் தேவையை உணர்ந்தோம். இயல்பாக தொடங்கப்பட்ட அவ்வகுப்புகள் பலநூறு பேருக்குப் பயனுள்ளவையாக ஆகி இன்று முதன்மைநிகழ்வாக ஆகிவிட்டிருக்கின்றன.

யோகம் -தியானம் ஆகியவை உரிய ஆசிரியரின் வழிகாட்டலுடன் செய்யப்படவேண்டியவை. அவை எளிய பயிற்சிகள் அல்ல. அந்த ஆசிரியர் தொழில்நுட்பப் பயிற்சியாளரும் அல்ல. முழுமையான வாழ்க்கைவழிகாட்டியென்றும் அவர் அமையவேண்டும். அத்தகைய தகுதிகொண்டவர்களால் இவ்வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தில்லை செந்தில் பிரபு நடத்தும் யோக- தியான வகுப்புகள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. அடுத்த வகுப்பு பிப்ரவரி 28 மார்ச் 1 மற்றும்2 ( வெள்ளி சனி ஞாயிறு) கிழமைகளில் நிகழும். புதியதாகக் கற்கவிரும்புபவர்களும், ஏற்கனவே இவ்வகுப்பில் கலந்துகொண்டு அப்யிற்சியை தொடரவிரும்புபவர்களும் கலந்துகொள்ளலாம். இப்போதே பதிவுசெய்யலாம்.

தொடர்புக்கு

[email protected]

 

 

 

 மேலைத்தத்துவ அறிமுகம் 

அஜிதன் நடத்திவரும் மேலைத்தத்துவ வகுப்புகள் பங்கேற்பாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை. இன்றைய நவீனச் சிந்தனைகளைப் புரிந்துகொள்ள, இன்றைய அரசியலையும் திரைப்படம் உட்பட கலைகளையும், இலக்கியத்தையும் உள்வாங்க அவையே அடிப்படையானவை. மேலைச்சிந்தனைப் பயிற்சி அற்ற ஒருவரால் அவற்றை முழுமையாக புரிந்துகொள்ளவோ மதிப்பிடவோ முடியாது. நிர்வாகவியலில்கூட அடிப்படைகள் மேலைச்சிந்தனை சார்ந்தவை. ஆகவே நவீன மனிதனுக்கு தவிர்க்கவேமுடியாதவை.

மேலைச்சிந்தனைகளை நாம் துண்டுதுண்டாக கட்டுரைகள், மேற்கோள்கள் வழியாகவே அறிந்திருக்கிறோம். அவை பலசமயம் நம் கற்பனைகள், அந்தத சூழல்கள் ஆகியவற்றை ஒட்டி பெரும்பாலும் நம்மால் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். தொடக்கம் முதல் மேலைச்சிந்தனை  எப்படி அடிப்படையான வினாக்கள், மற்றும் அவற்றின் மீதான விவாதமாக உருவாகி வந்துள்ளது என்பதை அறிவது மிக அவசியமான ஒன்று.

அத்தகைய அறிமுக வகுப்பு இது. ஒட்டுமொத்தமாக நவீன மேலைச்சிந்தனைகளை அறிமுகம் செய்து, அவற்றை மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கான அடிப்படைகளையும் அளிக்கிறது.

நாள் மார்ச் 14, 15 மற்றும் 16

தொடர்புக்கு

[email protected]

முந்தைய கட்டுரைநற்றுணையாவது…
அடுத்த கட்டுரைஅறிவியலும் கோமியமும்