இரா.முருகன், மீண்டெழல்.
அன்பு ஜெ
எழுத்தாளர் இரா முருகன் மீண்டு வந்து எழுதுவதை பார்த்த போது நிஜமாகவே என் என் உடல் சிலிர்த்தது.
விழா விற்கு இரண்டு தினம் முன்பாக உங்களோடு வந்து அவரை அறையில் பார்த்தபோது அவர் உடல் விழாவுக்கு வந்து அமர்ந்து நிறைவு பெறும் வரை ஒத்துழைக்க வேண்டும் என்றே நான் முதலில் நினைத்தேன்.
சனிக்கிழமை சிறிது உற்சாகத்தோடு அவர் வந்து இருந்து கலந்து கொள்ள ஆரம்பித்தார்.
ஞாயிறு மாலை அவருடைய உடல் மொழி நன்றாகவே மாறி இருந்தது அது போலவே அவருடைய குரலும்.
சென்னை புத்தக கண்காட்சியில் அவர் அமர்ந்திருந்த தோரணையும் கணினி உன் அமர்ந்து அவர் தட்டச்சு செய்கின்ற இந்த படத்தை பார்த்தவுடன் நான் நம்ப முடியாத ஆச்சரியத்துடன் மகிழ்ந்து போனேன்
அடிக்கடி medical miracle வார்த்தையை கேள்விப்பட்டதுண்டு கண்கூடாக பார்த்தது இவரிடம் தான்
நேரில் பேசும்போதே அவர் திரு கமல் அவர்களை மேற்கோள் காட்டி சில விஷயங்களை சொல்லிக் கொண்டே இருந்தார். என் ஆதர்சன நாயகர்கள் எப்போதும் உயரத்திலேயே இருப்பார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
இன்று அவர் மிக நலமாக இருக்கிறார் என்பது எழுத்தை அவர் எந்த அளவுக்கு நேசிக்கிறார் நண்பர்களை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்று புரிந்தது. இரண்டும் கலந்து உடல் நலத்தை மேம்படுத்துவது தெய்வச் செயல்.
கண்டிப்பாக விஷ்ணு புறம் விழாவிற்கு வந்த பிறகு அவர் இவ்வாறாக இருக்கிறார் என்பது எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது
நன்றி!
எஸ் நடராஜன்
கோவை