ஜனவரி மாத கவிதைகள் இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழில் இந்தி கவிஞர் கிரிராஜ் கிராது கவிதைகள், எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது. க.நா.சு கட்டுரைத் தொடரில் ’புதுக் கவிதை’ என்ற தலைப்பில் கலை நுட்பங்கள் புத்தகத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த கட்டுரை இடம்பெற்றுள்ளது.
மேலும் கவிஞர் வண்ணதாசனின் ’காற்றைக் கேட்கிறவன்’ கவிதை தொகுப்பு குறித்து மதார் எழுதிய வாசிப்பனுபவ குறிப்பும், பைபிளில் உள்ள உன்னத சங்கீதம் பற்றிய சிறுகுறிப்பும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது.
https://www.kavithaigal.in/
நன்றி,
ஆசிரியர் குழு
(மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)