பொது பொன் எனப் பொலிதல் January 16, 2025 எந்தக் கல்விக்கும் எந்தச் சிந்தனைக்கும் நோக்கம் என ஒன்று இருக்குமாயின் அது பொலிதலே. ஒளிகொள்ளுதல். தன் அகத்தில் அந்த ஒளியை ஏற்றிக்கொள்ளுதல். இப்புடவியெங்கும் அவ்வொளியே நிறைந்துள்ளது. அதை அறிவதற்கான ஒரு வழிதான் ஞானம்.