ஆனந்த சைதன்யா மையம், உரை

சென்ற 20 டிசம்பர் 2024 அன்று கோவையில் குரு தில்லை செந்தில்பிரபு அவர்கள் நிறுவியுள்ள ஆனந்த சைதன்யா தியானமையம் திறப்புவிழா நிகழ்ந்தது. அதில் நான் உரையாற்றினேன்.

 ANANDA CHAITANYA FOUNDATION

தில்லை செந்தில்பிரபு முப்பதாண்டுகளுக்கும் மேலாக தியான ஆசிரியர். தொழில்முனைவோரும்கூட. அவர் உருவாக்கியிருக்கும் கல்வி- தியான அறக்கட்டளை ஆனந்த சைதன்யா தியான மையம். முதன்மையாகக் கல்வி உதவிகள் வழங்குவது, மாணவர்களுக்குத் திறன்மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்குவது ஆகியவற்றையே இந்த அறக்கட்டளை சென்ற சில ஆண்டுகளாகச் செய்து வருகிறது. இப்போது சொந்தக் கட்டிடத்தில் எல்லா செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்துக்கொண்டு முன்செல்லவிருக்கிறார்கள்.

விழாவில் நான் அருண்மொழியுடன் கலந்துகொண்டேன். முழுமையறிவு நிகழ்வில் மரபிலக்கியம் கற்பிப்பவரான ஆசிரியர் மரபின்மைந்தன் முத்தையா தில்லை செந்தில்பிரபுவின் நீண்டகால நண்பர். அவரும் கலந்துகொண்டார். நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அந்நாளில் நான் ஆற்றிய உரையின் காணொளி இது.

முந்தைய கட்டுரைகனவுகளின் ரகசியப்பாதைகள்…
அடுத்த கட்டுரைWhy no online classes?