அறம், கோலம்

வணக்கம் ஐயா..

சென்னை புத்தகக் கண்காட்சியைக் கொண்டாடும் விதமாக தினம் ஒரு புத்தகத்தை மார்கழி மாதக் கோலமாக வரைந்து வருகிறேன்.

அந்த வகையில் இன்று அறம்.

அதைத் தங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

-ப. மோகனா

அரசுப் பள்ளி ஆசிரியை,

சென்னை.

அன்புள்ள மோகனா

அறம் கதைகள் எந்தவகையான ‘இலக்கிய நோக்கமும்’ இல்லாமல் எழுதப்பட்டவை. அவற்றை என்னுடைய தத்தளிப்பு, தேடலின் பொருட்டே எழுதினேன். இன்று அவை உலகளாவ சென்றுகொண்டிருக்கின்றன. இந்தியமொழிகளில் தெலுங்கிலும், கன்னடத்திலும் அண்மையில் வெளியாகி பெரிய அளவில் வாசிக்கப்படுகின்றன. மலையாளத்தில் பல லட்சம் பிரதிகள் அதிலுள்ள கதைகள் விற்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்திலும் அண்மையில் வெளியான இந்தியமொழி நூல்களில் விற்பனையில் முதலிடத்தில் உள்ளன. அமெரிக்காவில் சர்வதேசப்பதிப்பு வெளியாகியுள்ளது.

இலக்கியம் என்பது இலக்கியம் கடந்த தேடலின் விளைவாகவே உருவாகமுடியும் என இந்நூலின் வெற்றி என்னிடம் சொல்லிக்கொண்டே உள்ளது.

ஜெ

——————————————————————-
முந்தைய கட்டுரைவாசிப்புப் போட்டியில் வென்றவர்கள்
அடுத்த கட்டுரைகரு.ஆறுமுகத்தமிழன்