பதினைந்துநாள் இடைவெளி

கடந்த 15 நாட்களாக நான் ஊரில் இல்லை. கொடைக்கானலில் மணி ரத்னத்தின் இல்லத்தில் அவருடன் தங்கியிருந்து புதிய படத்தின் திரைக்கதையை முடித்துவிட்டு வந்தேன். இந்நாட்களில் செய்தித்தாள் வாசிக்கவில்லை.  தொலைக்காட்சி எப்போதுமே பார்ப்பதில்லை. இணையத்தைத் திறக்கவில்லை. செல்பேசியை மூடியே வைத்திருந்தேன்.  மொத்தத்தில் முற்றிலும் புதிய ஒரு தனி உலகில் இருந்தேன்.

எழுத்து, வாசிப்பு, விவாதம்,நடை என தினங்கள் ஓடின. அடித்தளத்தில் இருந்த வீட்டுத்திரையரங்கில் அனேகமாக தினம் ஒரு திரைப்படம் பார்த்தேன். இந்நாட்களில் இணையம், தொலைபேசி வழியாகத் தொடர்புகொண்ட நண்பர்கள் அனைவருக்கும் தொடர்புகொள்ளமுடியாமை பற்றிய வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செய்திகளுக்கு அப்பால் வாழ்வது எவ்வளவு முக்கியம் என்ற எண்ணம் இப்போது ஏற்பட்டுள்ளது. செய்திகள் தொடர்புகளின் உலகுக்குத் திரும்பி வருவதே கடினமாக உள்ளது. இனிமேல் அடிக்கடி இம்மாதிரி இடைவெளிகளை விடவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைகூடங்குளம்