ஆலயக்கலை வகுப்புக்கும், சைவ வகுப்புக்கும் வந்தவர்களில் சிலர் ‘மரபுக்கவிதைகளை படித்துப் புரிந்துகொள்ளாமல் அடுத்தபடிக்குப் போகமுடியாது போலிருக்கே’ என்று எனக்கு எழுதினார்கள். ஏனென்றால் நம் மரபுஞானம் அனைத்தும் செய்யுளிலேயே உள்ளன. அவற்றை நேரடியாகப் பயில ஆரம்பிப்பவர் ஒரு பெரும் புதையலறையின் வாசலைத் திறக்கிறார்.
நாம் மதம், ஆன்மீகம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம். மிக எளிய வாட்ஸப் செய்திகளையே அதற்குச் சார்ந்திருக்கிறோம். உண்மையிலேயே அவற்றை அறிய மரபுசார்ந்த நூல்களைப் பயின்றாகவேண்டும். அதற்கு செய்யுளை உள்வாங்கும் திறன் தேவை.
அதன்பொருட்டே வைணவ இலக்கியம், சைவ இலக்கியம் சார்ந்த பயிற்சிகளை அளிக்கிறோம். மரபுக்கவிதைகளை வாசிப்பதற்கான பயிற்சி, ரசிப்பதற்கான வழிகாட்டு நிகழ்வு ஒன்றை அமைக்கலாமென்னும் எண்ணம் எழுந்தது. மரபின் மைந்தன் முத்தையா நடத்திய சென்ற நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மரபிலக்கியத்துக்குள் நுழைவது இத்தனை எளியதா என்ற திகைப்பை எழுதியிருந்தனர்.
எளிதுதான், கற்பிப்பவரின் ரசனையே அதற்கான அடிப்படை. வெறுமே இலக்கணப்பாடமாக, தகவல்களாக கற்பிக்கமுடியும். ஆனால் ரசனையினூடாகக் கற்பித்தால் அது ஒரு பெரும் களியாட்டாக அமையும். மரபிலக்கியத்தை பின்னாலிருந்து தொடங்கி வரலாற்றுஒழுக்காக கற்பிப்பதே கல்விக்கூட வழிமுறை. நம் எளிய ரசனையில் இருந்து தொடங்கி விரித்தெடுத்துக்கொண்டே சங்ககாலம் வரைச் செல்வதே டி.கே.சிதம்பரநாத முதலியார் (ரசிகமணி) உருவாக்கிய மரபு.
அம்மரபின்படி இன்று மரபிலக்கியம் கற்பிப்பவர் மரபின்மைந்தன் முத்தையா.குற்றாலத்தில் டி.கே.சி. விழாவில்தான் 2000 வாக்கில் அவரை நான் முதலில் சந்தித்தேன். சாரல்மழையுடன் மூன்றுநாட்கள் மரபிலக்கியத்திலேயே தோய்ந்து இருந்த நாட்கள் அவை.
முத்தையா மீண்டும் மரபிலக்கிய வகுப்புகளை நடத்துகிறார்.
கல்விநிறுவனங்களில் பயில்பவர்கள் இலவசமாகக் கலந்துகொள்ளலாம்.
நாட்கள் ஜனவரி 17 18 மற்றும் 19
தொடர்புக்கு [email protected]
வரவிருக்கும் நிகழ்வுகள்
ஆலயக்கலைப் பயிற்சி
இந்திய சிற்பக்கலை – ஆலயக்கட்டுமானக்கலை ஆகியவற்றைப் பற்றி ஜெயக்குமார் நடத்திவரும் வகுப்புகள் இன்று தமிழகத்தில் நிகழும் முதன்மையான கலாச்சாரநிகழ்வுகள். பெருவரவேற்பு பெற்றிருக்கும் இவ்வகுப்பின் அடுத்த அமர்வு வரும் ஜனவரி 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நிகழ்கிறது. ஆர்வமுள்ளோர் எழுதலாம்
தொடர்புக்கு [email protected]
- ஒளிரும் பொற்கணங்கள்
- திட்டு, முதற்சாதனை
- கலையில் உயிர்கொள்ளுதல்
- கலையில் விழித்தெழுதல்
- கலை கண்விழித்தல்
- பாறையும் கோபுரமும்
- பதாமி பயணம்
- துளி மதுரம்
- ஆலயக்கலை :கற்றல் உணர்தல்
-
சைவம்- அறிமுக வகுப்புகள்
தமிழர்களில் சைவர்களே மிகுதி. ஆனால் சைவம் பற்றிய மிக எளிய அடிப்படைப்புரிதல்கள் கொண்டவர்கள் மிகமிகக் குறைவு. சைவசித்தாந்தமே இந்திய தத்துவ மரபுகளில் இறுதியாகத் தோன்றியது. அதுவரையிலான எல்லா இந்திய மெய்யியல்களை தொகுத்துக்கொண்டு முன்னெழுந்தது அது என்பார்கள். சென்ற தலைமுறை வரை சைவ சித்தாந்த வகுப்புகள் தமிழகத்தில் பரவலாக நிகழ்ந்து வந்தன. இன்று அவை மிக அருகிவிட்டன.
இன்றைய நவீனக்கல்வி பெற்ற இளைஞர்களுக்காக சைவசித்தாந்தத்தை அறிமுகம் செய்யும் வகுப்புகளை முனைவர் சாந்திகுமார அடிகள் நடத்திவருகிறார். ஏற்கனவே இரண்டு வகுப்புகள் முடிந்துள்ளன. அவை பெரும் திறப்புகளை அளித்தவை என பங்குபெற்றோர் எழுதியுள்ளனர். மீண்டும் இவ்வகுப்புகள் நிகழ்கின்றன. இவை மதச்சடங்குகள், ஆசாரங்கள் ஏதுமில்லாத தத்துவ வகுப்புகள். அனைத்து மதத்தினரும், மதநம்பிக்கை இல்லாதவர்களும் பங்குகொள்ளலாம். சைவ மதநம்பிக்கை உடையவர்கள் தங்கள் பாதையை மேலும் தெளிவுசெய்துகொண்டு சாந்திகுமார அடிகளின் வழி தொடரலாம்
நாள் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1, 2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க [email protected]
சைவசித்தாந்தமும் தத்துவக் கல்வியும்,ஒரு வினா
இந்திய தத்துவம்- இரண்டாம் நிலை வகுப்பு மீண்டும்
இந்திய தத்துவம் இரண்டாம் நிலை வகுப்பு மீண்டும் நிகழ்கிறது. பிப்ரவரி 7,8 மற்றும் 9 ஆம் தேதிகளில் இவ்வகுப்பு நிகழும். இந்திய தத்துவம் முதல் வகுப்பு முடிந்தவர்கள் பங்கு பெறுவதற்குரியது. இவ்வகுப்பை முன்னர் பயின்றவர்கள் மேலதிகத் தெளிவுக்காக மீண்டும் கலந்துகொள்வதென்றாலும் கலந்துகொள்ளலாம்.
தொடர்புக்கு