நான் கண்ட அதிசயம்.. தமிழ் இலக்கியத்துக்கு இடை விடாது சேவை செய்யும் மாபெரும் சாதனையாளர் ஜெயமோகனுக்கு எனது பணிவான வணக்கங்கள்.. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள்.. இதுவரை இப்படி ஒரு நிகழ்ச்சியை நான் கண்டது இல்லை.. எனக்குப் புத்துணர்வு வந்து விட்டது.. வயது பாதியாக 40 ல் நின்று விட்டது.. இது விஷ்ணுபுரம் வட்டமைய்யம் தமிழ் இலக்கியத்துக்குச் செய்த அபிஷேக ஆராதனை.. தமிழன்னை மீது வைத்துள்ள பக்தியின் உச்சம்.. தமிழ் என்று சொல்லடா.. தமிழன் என்று தலை நிமிர்ந்து நில்லடா.. தமிழ் வாழும்.. மேலும் மேலும் வளரும்.. பிரளயமே வந்திடினும், கடைசித்தமிழன் உயிர்மூச்சு இருக்கும்வரை தமிழ் நிலைத்து நிற்கும்.. எதிர்த்து நிற்கும் தீய சக்திகளே இவ்வுலகில் இல்லை.. பகிர்ந்தமைக்கு நன்றி.. வாழ்த்துக்கள்..
பின்னங்குடி சுப்ரமணியம்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
நான், என் மனைவி ஈஸ்வரி, தோழியர்கள் நிர்மலா மற்றும் பிரீத்தி ஆகிய நால்வரும் விஷ்ணுபுரம் விழாவிற்கு சென்னையில் இருந்து வந்திருந்தோம். நான் ஒரு சிறு குழந்தையின் மன நிலையிலேயே பரவசத்துடன் வந்திருந்தேன். நான் விழாவிற்கு பதிவு செய்த நேரம் முதல் sir வருவாங்களா, அவரை பார்க்க முடியுமா, பேச முடியுமா என்று கேட்டு கொண்டே இருந்தேன். கடந்த 4 மாத காலமாக எனது மனைவியின் மூலமாக புத்தகம் வாசிக்கும் பழக்கம் கிடைக்கப்பெற்று வாசித்து வருகிறேன். எனது மனைவி சிறு வயது முதல் வாசிக்கும் பழக்கம் கொண்டவள்.
வெள்ளி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை காலை கோவை வந்து சேர்ந்தோம். எனக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று தயாராகி உடன் இருந்த நண்பருடன் ராஜஸ்தானி அரங்கிற்கு வந்து சேர்ந்தோம். சரியாக 9.10 அரங்கின் வெளியில் உங்களை சந்திக்கும் தருணம் எனக்கு வாய்த்தது. என் மகன் முகேஷ் பிறந்த தருணத்தை போன்ற மகிழ்ச்சியை அடைந்தேன். உங்கள் கைகளை வாங்கி என் கண்களில் ஒற்றிக் கொண்டேன். ஆமாம், “சரஸ்வதி குடி கொண்டிருக்கும் கரங்கள் அல்லவா”. எங்கள் கண்கள் இப்பொழுதும் குளமாகி கொண்டே இருக்கிறது அத்தருணத்தை நினைக்கையில். பிறவிப் பயனை அடைந்து விட்டேன் என உணர்கிறேன்.
எனது 40ஆவது வயதில் தான் நான் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். வாழ்க்கையின் முந்தைய காலத்தை வீணடித்து விட்டேனே என்ற குற்ற உணர்ச்சி என்னை வாட்டியது. இதை தங்களிடம் கலந்து உரையாடி, தாங்கள் தந்த விளக்கம் அந்த குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட வழிவகுத்தது.
நான் கலந்து கொண்ட முதல் இலக்கிய நிகழ்ச்சி விஷ்ணுபுரம் விருது விழா. உலகின் தலைசிறந்த படைப்பாளிகளை சந்திக்கவும், அவர்களின் படைப்புகளை பற்றிய இலக்கிய அமர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்பும் அளித்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும், தங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
இனி வரும் காலங்களில் எனது வாசிக்கும் பழக்கம் அதிகரித்து இது போன்ற இலக்கிய அமர்வுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமையும் என்ற நம்பிக்கையுடன், அடுத்த தங்களின் சந்திப்பிற்காக காத்திருக்கும்
புதிய வாசகன்,
பொன்ராஜ்
சென்னை
Good morning Mr. Jayamohan ,