ஆழ்நீர்- கடிதம்

ஆழ்நதியைத்தேடி-மதிப்புரை

வேரறிதல்

மலர்கள் நினைவூட்டுவது- விஷால் ராஜா

அன்புள்ள ஜெ,

தமிழிலக்கியத்தின் மெய்யியலைப் பற்றி நான் வாசித்தவரை இதுவரை வெளிவந்த எல்லா நூல்களுமே ஒன்று மதம் சார்ந்தவை அல்லது அரசியல் சார்ந்தவை. மதம், அரசியல் இரண்டுக்கும் அப்பால் ஆன்மிகம் அல்லது மெய்யியல் என்று ஒன்று உண்டு என்பதையே இங்கே எவரும் புரிந்துகொள்ளவில்லை. அண்மையில் உங்களுடைய நூலான ஆழ்நதியைத் தேடியை அந்த பேசுபொருளுக்காகவே வாங்கி வாசித்தேன். என் பார்வையை திருத்தியமைத்த முக்கியமான நூல்களில் ஒன்று. சிக்கலான மொழிநடையும், கலைச்சொற்களும் இல்லாமல் ஓர் அழகான உரையாடலாகவே அந்நூல் அமைந்திருந்தது.

சங்க இலக்கியம் காட்டும் அக்கால வாழ்க்கையில் இருந்து இன்று வரை நீடிக்கும் மெய்யியல்கூறுகளை தொட்டுக்காட்டுகிறீர்கள். அவற்றில் சில அம்சங்கள் மதநம்பிக்கைகளாகவும் உருவகங்களாகவும் இன்று உள்ளன. சில அம்சங்கள் இன்றைய விழுமியங்களாக மாறியுள்ளன. நாம் அகப் பரிணாமம் அடைந்த நீண்ட பாதையை அழகான இலக்கியக்குறிப்புகள் வழியாகச் சுட்டிக்காட்டும் இந்நூல் மொத்த தமிழிலக்கியத்தையே புதிய பார்வையில் புரிந்துகொள்ள வழிவகுக்கக்கூடிய ஒன்று.

நா. ஜினநாதன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா, கடிதம்
அடுத்த கட்டுரைஶ்ரீவேணுகோபாலன்