நேர்வழி விருது விழா அழைப்பு

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஈரோடு மற்றும் திருப்பூரில் அறக்கல்வி பயின்ற 17 மாணவர்கள் இணைந்து புதிதாக “முனை இளைஞர் இயக்கம்” என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கியுள்ளோம். அதில் முதல் நிகழ்வாக நேர்மையான இரண்டு அரசு ஊழியர்களுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்து அவர்களுக்கு நினைவுப் பரிசாக ஒரு அடியிலான காந்தி சிலை ஒன்று அளித்து அவர்களை கௌரவிக்கப் போகிறோம். சுபா மற்றும் ஸ்ரீதரன் ஆகிய இரண்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இந்த விருதை அளிக்க முடிவு செய்து உள்ளோம். அவர்களுக்கு இந்த விருதை அளிக்கப் போகும் மூன்று நபர்களும் நேர்மையான அரசு அதிகாரிகள் தான்.

இந்த நிகழ்வு ஈரோடு மாவட்டத்தில் அத்தாணி அருகே அம்மாபாளையம் என்னும் ஊரில்பவானி ஆற்றங்கரையில் வருகிற டிசம்பர் 12 வியாழன் மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை நடக்க உள்ளது. அதில் முதல் அரை மணி நேரம் சவுண்டு மணி என்பவரின் வாத்திய இசையும் நடைபெற உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக உங்களையும், அறப்போர் இயக்கத்தின் நிறுவனர் ஜெயராம் அவர்களையும் அழைத்து உள்ளோம்.

இந்த விழாவில் உங்களோடு சிறப்பு விருந்தினராக வரவிருக்கும் ஜெயராம் அவர்களை நாங்கள் சென்னை சென்று ஒரு நேர்காணல் எடுத்துள்ளோம். அவர் சமூக செயல்பாட்டிற்குள் வருவதற்கு காரணமாக அமைந்த தருணம், அவர் சந்தித்த சிக்கல்கள், வழக்குகள், சிறை அனுபவம் என்று அந்த நேர்காணல் மிகத் தீவிரமான வந்துள்ளது. விருதாளர்கள் இருவரையும் நேர்காணல் எடுத்து உள்ளோம். இந்த நேர்காணல்களையும், விழா அழைப்பிதழையும் இணைத்துள்ளேன்.

அனைவரும் இந்த விழாவில் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று முனை இளைஞர் இயக்கத்தின் சார்பாக அழைக்கிறோம்.

 

சிபி,

முனை இளைஞர் இயக்கம்,

ஈரோடு.

 

முனை அறிமுகம்: https://munaiassociation.blogspot.com/2024/11/blog-post.html

அறப்போர் ஜெயராம் நேர்காணல்: https://munaiassociation.blogspot.com/2024/12/blog-post.html

விருதாளர் சுபா நேர்காணல்: https://munaiassociation.blogspot.com/2024/12/blog-post_5.html

விருதாளர் ஸ்ரீதரன் நேர்காணல்: https://munaiassociation.blogspot.com/2024/12/blog-post_7.html

 

முந்தைய கட்டுரைகே.சச்சிதானந்தன், ஐந்து கவிதைகள்
அடுத்த கட்டுரைWhy philosophy videos?