மாயவம்சம்- தமிழ்க்குமரன் துரை

விஷ்ணுபுரம் விழாவிற்காக எழுத்தாளர் இரா.முருகன் அவர்களின் படைப்புலகம் பற்றி தெரிந்துகொள்ள அவரது படைப்புகளை படிக்கவேண்டும் ஏற்கனவே நண்பர்கள் மிளகு நாவல் நன்றாக இருப்பதாக கூறியிருந்தனர் பின்னர் நண்பர் பாலசுப்ரமணியம்  அரசூர் வம்சம் நாவலை பரிந்துரைத்தார்.

படிக்கத் தொடங்கிய சில பக்கங்களில் சில குழப்பங்களை அடைந்தேன் காரணம் இதற்கு முன் மாய யதார்த்தவாத படைப்புகள் எனக்கு அறிமுகமாகவில்லை,

மேலும் முன்னோர்கள் பேசுவது அனைவருக்கும் கேட்கிறதா இல்லை சுப்பம்மாள் பட்டிக்கு மட்டும் கேட்கிறதா? போன்ற சந்தேகங்கள் தோன்றியது ஆனால் அது புதிய எழுத்தாளரின் படைப்புலகத்தை வாசிக்கும்போது ஏற்படும் சாதாரண தடங்கள் என்பதை  உணர்ந்துகொண்டேன்.

சில பக்கங்களில் கதாபாத்திரங்களுடன் ஒன்றி கதை விறுவிறுப்பாக நகர்ந்தது அதற்கு காரணம் இரா.முருகனின் மொழி நேர்தியும் , நகைச்சுவையான கூறல் முறையும் தான்.

கதை தொடங்குவது தோராயமாக ஆயிரத்து எண்ணறுகளின்  மத்தியில்

நேரத்தின் சமூக மாற்றங்களை கதயினூடே குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக காப்பி தொடக்கத்தில் பிராமணர்களின் பானமாக கருதப்பட்டு பின்னர் படிப்படியாக அனைவருக்கும் சென்று சேர்ந்ததை பற்றிய எழுதியுள்ளார்.

இரா.முருகனின் முன்னோர்கள் சமையல் தொழிலில் இருந்து புகையிலை வியாபாரம் செய்ய தொடங்கிய பொழுது சமூகத்தில் அவர்களின் மீது எழுந்த விமர்சனங்களை பதிவுசெய்துள்ளார்.

அரசூர் வம்சம் நாவல் கல்கியை அடிக்கடி நினைவுபடுத்தியது

தெளிவான பிராமண உரையாடல்கள் மற்றும் நகைச்சுவையான கதைநகர்வு போன்ற காரணங்களை கூறினாலும் அரசூர் வம்சம் ஒரே தளத்தில் தேங்கிவிடாமல் வேறொரு களத்திற்கு நகர்கிறது.

தனது மொழிநேர்த்தியால் காலத்தை முன்பும் பின்பும் நகர்த்தி அதில் சங்கரன், சாமிநாதன், ராஜா, சுப்பம்மாள் போன்ற நிகழ்கால கதாபாத்திரங்களையும், முன்னோர்கள்புஸ்திமீசை கிழவன்,யந்திரத்தில் உள்ள தேவதைகள் , பறக்கும் வயசன் போன்ற கற்பனை கலந்த கதாபாத்திரங்களை சமைத்து அதில் ஒரு வாழ்வனுபவத்தை அளிக்கிறார்

அரசூர் வம்சம்  அரசூர் புகையிலை விற்க்கும் பிராமண குடும்பத்தையும், ஆங்கிலேய அரசிடமிருந்து கிடைக்கும் குறைந்த பணத்தில் ஜீவனம் செய்துவரும் ஜமீன்தாரையும், அம்பலப்புழையில் சமையல் தொழிலில் உள்ள கிட்டாவையரின் குடும்பத்தையும், சென்னயில் குமாஸ்தா வேலைசெய்யும் வைத்தியநாதன் குடும்பத்தையும் வைத்து கதைநகர்கிறது ஒவ்வொரு குடும்பத்தையும் சுற்றி நிகழும் சமூக மாற்றங்களை ஹாஸ்யமாகவும், மாய யதார்த்ததுடனும் விவரிக்கிறார்.

குறிப்பாக கிட்டாவையர் மதமாற்றம் அந்த காலகட்டத்தின் முக்கிய சமூக மாற்றம்.

சில தருணங்களில் வாசர்களை வெடித்துச் சிரிக்க வைக்கிறது 

உதாரணமாக புஸ்திமீசை கிழவன் சாவில் உடலை குளிப்பாட்டும் பொழுது அவரது உடல் விரைத்து எழும் அருகிலிருப்பவன்அப்பு நீரு செத்துட்டீரு படுங்கஎன்று சொல்லும் தருணத்தில் நான் உரக்க சிரித்தேன்

அதே போல ராஜாவின் முன்னோர்களுக்கு தர்ப்பணம்  எள்ளு சாதம் படைக்கவேண்டும் என்று கூறும்பொழுது முன்னோர்கள் அசைவம் படைக்கவேண்டும் என்று கேட்பார்கள் அதற்கு அந்தணர்முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க எள்ளு சாதம் தான் படைக்க வேண்டும் வேண்டுமென்றால் புத்தகத்தை காட்டுகிறேன்என்று கூறும் தருணம் வெடித்துச் சிரிக்க வைக்கிறது.

கதைபோக்கு ஒரு மையக்கருவை சுற்றி நிகழவில்லை மாறாக நேர்கோட்டில் தனக்கே உரிய எள்ளல் கலந்த மாயங்களுடன் தன் காலத்தில் நிகழ்ந்தவற்றை பதிவுசெய்தவாறே நகர்கிறது.

மேலும் அரசூர் வம்சம் நாவலை படிப்பவர்களையும் அவர்களின் முன்னோர்கள் பற்றிய சிந்தனையை தூண்டி, தேடுதலை முன்னெடுக்க வைக்கிறது.

விஷ்ணுபுரம் விருது பெறும் இரா.முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தமிழ்குமரன் துரை,

பெங்களூர் 

முந்தைய கட்டுரைகீரனூர்க்காரர்- சுரேஷ் பிரதீப்
அடுத்த கட்டுரைசு.நடேசப்பிள்ளை