குருகு- 17 இதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு

குருகு பதினேழாவது இதழ் வெளிவந்துள்ளது. பொறியாளர் உதயசங்கரின் நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. உதயசங்கர் தொல்லியல் ஆர்வலர், கல்வெட்டுக்களுக்கான தேடு பொறியை பொதுப் பயன்பாட்டுக்கு உருவாக்கி அளித்துள்ளார்.

 ஜோசப் கேம்ப்பெல்லின் தொன்மங்களின் ஆற்றல் தொடர் இந்த இதழிலிருந்து துவங்குகிறது, அமெரிக்க நவீன மனநிலை சார்ந்த போதாமைகள் மீதான கேம்ப்பெல்லின் நீண்ட உரையாடலின் எழுத்து வடிவம் இது. வேதத்தின் அறிதல்கள் குறித்த தொடரின் முதல் பகுதியாக அனங்கன் எழுதிய கட்டுரையான முதல்வினா வெளிவந்துள்ளது. ராகுல் தருண் எழுதியுள்ள ஆங்கில கட்டுரை கானுயிர்கள் குறித்த இனிய அறிமுகம். ஸ்ரீகண்டய்யாவின்இந்தியக் கவிதையியலின் இப்பகுதி நாட்ய சாஸ்திரம் குறித்து விவரிக்கிறது. செவ்வேள் ஆடல், பௌத்த வினாவல் தொடர்கள் வெளிவந்துள்ளன

தொடர்ந்து கிடைக்கும் வாசக எதிர்வினைகள் இதழை மேலும் செறிவுள்ளதாக ஆக்கிக்கொள்ள உதவுகிறது

நன்றி 

http://www.kurugu.in 

 பிகுகுருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்

https://x.com/KuruguTeam

முந்தைய கட்டுரைபிரதமன், ஆங்கிலத்தில்
அடுத்த கட்டுரைதிருமலை முத்துசுவாமி