வைணவ இலக்கிய அறிமுகம்
வைணவ பக்தி இலக்கிய அறிமுகம் ஜா.ராஜகோபாலன் மீண்டும் நடத்துகிறார்.
வைணவ பக்தி இலக்கியம் தமிழின் மொழியழகை, இலக்கிய நயங்களை அறிவதற்குரிய அரசப்பெருவழி. கம்பராமாயணம் உள்ளிட்ட பேரிலக்கியங்களுக்குள் நுழைவதற்கான வழியும்கூட. அதற்கப்பால் , அது ஒரு மகத்தான ஆன்மிகக்கல்வி. மானுட உணர்வு நிலைகளின் உச்சங்கள் வழியாக தத்துவத்தை, மெய்யியலைச் சென்று தொடுவது அப்பயணம்.
மரபிலக்கியத்தை எளிதாக, நேரடியாகப் பயிலமுடியாது. பொருளுணர்வது கடினம். அதைவிட உளநிலை அமைவது கடினம். உரிய ஆசிரியரிடமிருந்து கற்பதென்பது ஒரு பெருந்தொடக்கம்
நாள் December 13 -14 -15
தொடர்புக்கு [email protected]
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவை
கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள்
சிறில் அலெக்ஸ் நடத்தும் கிறிஸ்தவ இறையியல் வகுப்புகள் இரண்டுமுறை நிகழ்ந்துள்ளன. கிறிஸ்தவம் பற்றி நமக்குத்தெரிந்திருப்பது கொஞ்சம். முறையான அறிமுகம் நமக்கு மிகப்பெரிய ஆன்மிக வெளிப்பாடாக அமையும். நம் மதங்களை நாமே மேலும் அறியவும் உதவும்.
வெறும் தத்துவ- ஆன்மிக அறிமுகங்கள் அல்ல இவை. ஒருபக்கம் இவை மத்திய ஆசிய- ஐரோப்பிய வரலாற்றின் அறிமுகம். இன்னொருபக்கம் ஐரோப்பிய சிந்தனை மரபின் அறிமுகம். ஐரோப்பாவை அதன் பண்பாட்டுப்பின்புலத்துடன் அறிந்துகொள்ளவும் இவை மிக உதவியானவை.
இன்றைய நவீன மேலைநாட்டுப் பண்பாட்டை, அதன் வெளிப்பாடான நவீன சினிமாவையும் இலக்கியத்தையும் இந்த அறிமுகம் இல்லாத ஒருவர் புரிந்துகொள்ள முடியாது.
டிசம்பர் 6,7 மற்றும் டிசம்பர் 8
விண்ணப்பிக்கலாம்
தொடர்புக்கு [email protected]
- பைபிள், கடிதங்கள்
- பைபிளின் மெய்யியல் – கடிதம்
- கிறிஸ்தவ மெய்யியல் – கடிதம்
- பைபிள் கற்பவர் எவர்?
- கிறிஸ்தவ ஆன்மிகம், தத்துவம், வரலாறு – அறிமுக வகுப்புகள்
- பைபிளை அறிதல், கடிதம்
- பைபிளை அறிதல், கடிதம்
- பைபிளை அறிதல்… கடிதம்
- ஜெபமோகன்?
வரவிருக்கும் நிகழ்வு
மேலைத்தத்துவம்
அஜிதன் நடத்திய மேலைத்தத்துவ அறிமுக வகுப்பு ஒருமுறை நிகழ்ந்துள்ளது. கலந்துகொண்டவர்கள் தத்துவம் அளிக்கும் கற்றல் அனுபவம் என்ன என்று உணர்ந்ததாகச் சொன்னார்கள். நவீன வாழ்க்கை, நவீன அறிவியல் அனைத்தைப்பற்றியும் சிந்தனையில் ஒரு தொடக்கம் நிகழ்ந்ததாக எழுதியிருந்தனர். இன்றைய நவீனக்கல்விபெறும் எவரும் அடைந்தே ஆகவேண்டிய முழுமையான பயிற்சி இது.
இது முன்பு நிகழ்ந்த வகுப்பின் மறுநிகழ்வு. புதியவர்களுக்கானது. இதில் மேலைத்தத்துவம் ஒட்டுமொத்தமாகவும், அதன் அடிப்படையான நவீன ஜெர்மானிய தத்துவம் (காண்ட், ஹெகல்.ஷோப்பனோவர், நீட்சே) முதன்மையாகவும் கற்பிக்கப்படும்.
டிசம்பர் 27,28 மற்றும் 29 அன்று நிகழும்.
எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru
Our English Website unifiedwisdom.today
எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்
எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்
எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta