மறக்கப்பட்டவர்- கடிதம்

அருமைநாயகம் சட்டம்பிள்ளை

அன்புள்ள ஜெ  அவர்களுக்கு,

இன்றைய தினத்தில் நம் தளத்தில் கொடுக்கப்பட்டிருந்த அருமைநாயகம் சட்டம்பிள்ளை என்பவர்களின் தமிழ் வி;ககி பதிவைப் படித்தேன். மிகப்பெரிய ஆச்சர்யமூட்டும் பதிவாய் இருந்தது. ஆங்கிலேய ஆட்சி இருந்தபோதே அவர்களை மதரீதியாய் தனிமனிதனாய் எதிர்த்துப் போராடிய அவரைப் பற்றி படிக்கப்படிக்க அவ்வளவு நன்றாய் இருந்தது. ஐந்து மொழி அறிந்திருந்ததால் பஞ்சவர்ணக்கிளி என்று அழைக்கப்பட்டார் என்பதை புன்னகையுடன் படித்தேன். இரண்டாம் வத்திக்கான் சங்க கூடுகைகளுக்குப்பிறகே அந்தந்த நாட்டின் பண்பாட்டின் கூறுகள் ரோமன் கத்தோலிக்க மதத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவ்வளவு முதிர்ச்சியோடு 1850களிலேயே அவர் அதை சொல்லியிருப்பது மிக ஆச்சர்யமாய் இருந்தது. என் பிள்ளைகள் இருவருமே சென்த்டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் படித்த மாணவர்கள்தான். எப்போதுமே சனிக்கிழமை விடுமுறைதான். சனி ஞாயிறுகளில் வெளியே போகவேண்டும் என்று நினைத்தே பிள்ளைகளை அந்தப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோர்கள் உண்டு. வெள்ளி மாலை 3.30 மணிக்கே பள்ளி முடிந்துவிடும். அன்று மாலையே எல்லா உணவையும் செய்து முடித்துவிட்டு சனிக்கிழமை முழுவதும் ஓய்வுநாள் அனுசரிப்பார்கள். இன்னமுமே கிறிஸ்தவ மதத்தின் ஓய்வுநாள் சனியா ஞாயிறா என்று சந்தேகம் உண்டு. ஞாயிறு என்பவர்கள் அதற்குத்தகுந்த பைபிள் வசனங்களைக் கொண்டுவருவார்கள். சனிக்கிழமைதான் என்பவர்களும் அப்படியே. மிகச்சிறப்பான ஆவணமாய் இருந்தது சார். வாழ்த்துக்கள்.


With Regards,

T.Daisy,
Trichy.

முந்தைய கட்டுரைகனவும் நடைமுறையும்
அடுத்த கட்டுரைஐசக் அருமைராசன்