நியாயவியல் பழையகாலகட்டத்தில் பருப்பொருள் சார்ந்த பிரபஞ்சத்தை விளக்கும் தர்க்கமுறையாகச் செயல்பட்டது. பின்னர் சமணர்களும் பௌத்தர்களும் அதை தங்கள் பிரபஞ்சக்கொள்கைகளை விளக்க பயன்படுத்திக்கொண்டனர். உதயணர் நியாயவியலை இறை (பிரம்மம், ஈஸ்வரன்) கொள்கையை தர்க்கபூர்வமாக நிறுவுவதற்கு பயன்படுத்திக் கொண்டார். அது ஒரு பெரிய தொடக்கமாக அமைந்தது. அந்த வழியில் ஏராளமான வேதாந்த அறிஞர்கள் நியாயவியலை பயன்படுத்திக்கொண்டார்கள். நியாயகுசுமாஞ்சலி பின்னர் உருவான நவநியாயம் என்னும் புதிய நியாயவியலின் முதன்மைநூலாக கருதப்படுகிறது .
தமிழ் விக்கி நியாய குசுமாஞ்சலி