பொழுதுபோக்கு எழுத்து, இலக்கியம்- கடிதம்

இந்தப்பதிவு மிகத்தெளிவாக விளக்கமாக வணிக எழுத்தையும் இலக்கிய எழுத்தையும் வேறுபடுத்திக்காட்டுது சார்..மிக சிறந்த உரை.. நான் சிறுவயதில சுஜாதா தான் படிச்சேன்..குடும்ப சூழல் நெருக்கடி கட்டுப்பாடுகள்காரணமாக நீண்ட பதினைந்து வருடங்கள் படிப்பதற்கு புத்தகங்கங்களே கிடைக்காதப்போது புத்தகங்கள் பற்றிய புரிதல் இல்லை .அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக உங்க நூல்கள சிறுகதை களை படிக்க ஆரம்பிச்சப்ப மிகப்பெரிய பிரமிப்பு உண்டானது. அந்த மொழிநடை எழுத்துநடை நான் படிச்சதிலிருந்து வேறுபட்டதுன்னு உணர்த்துனது.
தொடர்ந்து உங்கள பதிவுகள் உரையாடல்கள் கட்டுரை கதைகளை படிக்க ஆரம்பிச்சேன்..நேற்று முந்தைய நாள் எழுதிய பாலியல் தொடர்பான கட்டுரைக்கூட மிக அற்புதம்..இந்த நவராத்திரி நாட்களில் உங்களது விஷ்ணு புரம் நாவலை படிக்க ஆரம்பித்திருக்கிறேன் இன்னும் முதல் அத்தியாயமே தொடவில்லை எழுத்தின் ஆளுமையின் பாரத்தால் ஒவ்வொரு பத்தியாக படித்து மனதிற்குள் அசைபோடுகிறேன் மூன்று நாட்களாக , கனவா இல்லை இதெல்லாம் உண்மையிலையே நடந்திருக்கா என பொறாமைக்கூட வந்தது.. அதெப்படி ஒரு மானுடனுக்கு மட்டும் கடவுள் சலுகை தரலாம் என கொஞ்சம் கோபமும் கூட .. விஷ்ணு புரம் என்னை மூழ்கடிக்கப்போகிறது எனப்புரிகிறது
.மரித்துறைவியைப்படித்துவிட்டு மீனாட்சி யைத்தேடி மதுரை வரை சென்று அவளை பார்த்ததும் தான் பித்து தெளிந்த மாதிரி விஷ்ணுபுரம் என்னை ஆளப்போகிறது என மட்டும் நன்கு புரிந்தது.. மகிழ்ச்சி இது போன்ற நூல்களை படிப்பதற்கே ஒரு கொடுப்பினை வேண்டும்.       ‌. நன்றி சார்..
தேவி லிங்கம்
வேதாரண்யம்.
முந்தைய கட்டுரைமுழுமையறிவு எதுவரை?
அடுத்த கட்டுரைசிகண்டி- ஒரு வாசிப்பு