சம்பந்தனின் கதைகள் மரபான கதைக்கருக்களை நேரடியான மொழியில் கூறுபவை. நவீனச் சிறுகதைக்குரிய உள்ளடுக்குகள் அற்றவை. புதுமைப்பித்தனுக்குப் பின் சிறுகதைகளில் உருவான சிறுகதை வடிவமும் விமர்சனக் கண்ணோட்டமும் அவற்றில் அமையவில்லை. ஆயினும் அவை வாழ்க்கையின் சில தருணங்களை நுட்பமாகச் சித்தரிக்கின்றன. உள்ளடக்கம், மொழிநடை, வடிவம் ஆகியவற்றில் தி.ஜ.ரங்கநாதன், த.நா.சேனாபதி, பி.எஸ்.ராமையா போன்றவர்களின் வரிசையில் வைக்கப்படவேண்டிய எழுத்தாளர்.
தமிழ் விக்கி சம்பந்தன்